சனி, 29 ஜூன், 2019

மேட்டுப்பாளையம் வர்ஷினி பிரியா ஆணவ கொலை .

tamil.oneindia.com - bahanya: கோவை: மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை
விவகாரத்தில் காதலனை தொடர்ந்து காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத். இவரது தம்பி கனகராஜ் வேறு சாதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதனை விரும்பாத அண்ணன் வினோத் தனது தம்பியிடம் காதலை கைவிடுமாறு பல முறை எச்சரித்துள்ளார். ஆனால் தம்பி அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி, இருவரும் சந்திப்பதை அறிந்த அண்ணன் வினோத், தம்பியையும் அவரது காதலியையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைத்தொடர்ந்து கனகராஜின் காதலியான வர்ஷினி பிரியா, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வர்ஷினி பிரியா உயிரிழந்தார்.

தம்பி கனகராஜை வெட்டிக்கொன்ற கையோடு வினோத் காவல்நிலையத்தில் சரணடைந்தார். ஆணவக்கொலையில் காதலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் காதலியும் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: