வியாழன், 3 செப்டம்பர், 2026

மூன்றாவது அணியை கட்டமைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் - நாடாளுமன்ற தேர்தல்

 News4 Tamil  :  லெப்ட் ஹேண்டில் தவெகவை டீல் செய்யும் காங்கிரஸ்.. திமுக அடுத்த ரூட் இதுதான்.. வல்லம் பஷீர் பரபரப்பு
"காங்கிரஸ் என்கிற பொதி சுமக்கும் கழுதையைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை. அரசியல் களத்தில் மூன்றாவது அணி அமையும் சூழல் உள்ள நிலையில், அதில் திமுக ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். ப.சிதம்பரம் சொன்னது போல 3வது அணி உருவாகும்போது திமுக அதில் தனது பங்கைச் செய்யும்" என்று கருத்து கூறியருக்கிறார் திமுக மூத்த தலைவர் வல்லம் பஷீர்.


Marshal Media சேனலுக்கு பேட்டி தந்துள்ள திமுக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர், "கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும்.. நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் தாரகை கதிர் இப்பட்டவர்கள் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..
எதற்காக திடீரென ராஜேஷ் குமார், "நாங்கள் அமைச்சர் பதவிக்காக எல்லாம் அமைதியாக இருக்க மாட்டோம், நாங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு கூட தயாராக இருக்கிறோம், ராகுல் தான் எங்கள் பிரதமர் வேட்பாளர்" என்று சொல்ல வேண்டிய கட்டாயம் எங்கிருந்து எழுகிறது?
பிரதமர் வேட்பாளர் விஜய்
அதேபோல உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கிற விஸ்வநாதன், "கடந்த காலத்தை போல அல்ல, காங்கிரஸ் கட்சி இப்போது புலி போல பாய்ச்சலுக்குத் தயாராகி இருக்கிறது" என்று பேசியதன் காரணம் என்ன? ஏனென்றால், தன்னுடைய நண்பன் யார் என்று தேர்வு செய்ய தவறியதன் விளைவுதான், இத்தகைய பேச்சுக்கள் எல்லாம்.
விஜய் அதிகாரத்திற்கு வருவோம் என்ற உத்தரவாதத்தை தேர்தலுக்கு முன்பாகப் பெற்றிருக்கவில்லை, அவருக்கே அது தெரியாது. ஆனால் அதிகாரத்திற்கு வந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோழர்கள் விரும்புகிறார்கள்.
முதலமைச்சராக எந்த உழைப்பும் இல்லாமல் இலகுவாக வந்துவிட்டதை போல, பிரதமராகவும் வந்துவிடலாம் என்ற மனநிலை அவர்களிடம் வெளிப்படுகிறது. பிரதமர் ஆனதற்கு பிறகு ஐநா சபை தலைவராக வேண்டும் என்று கூட எதிர்பார்ப்பார்கள். ரத்தன் பண்டிட்டின் ஜோசியர் ஒரு தனியார் ஊடகத்தில் பேசியபோது, "விஜய் அமெரிக்க அதிபராகக் கூட தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன" என்று பேசியிருக்கிறார்.
மதிமுக வைகோவின் மனஸ்தாபம்
இங்கே என்ன சிக்கல் என்றால், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாட்சி பகிர்கிறார். விஜய் வைகோவுக்கு மீது என்ன பகை என்று தெரியவில்லை.. ராகுல் காந்தி பெயரை சொல்லவும், வைகோவை பலரும் சோஷியல் மீடியாவில் விமர்சித்து வருகிறார்கள்..
ஆனால் வைகோவுக்கு விஜய் மீது ஒரு வருத்தம் உள்ளது.. தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் விஜய் வராததால் ஏற்பட்ட மனஸ்தாபமே இதற்கு காரணம்.
ஸ்டாலின் செய்த தாராளம்
இதுவரை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸோடு கூட்டு இல்லாவிட்டாலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு ராகுல் முகத்தை தேசிய அரசியலின் முகமாக நிறுத்தினார்... காங்கிரசுக்கு எந்த சங்கடமும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, ஸ்டாலின் இப்படி ராகுலை முன்நிறுத்தினார்.. ஆனால் அத்தகைய பக்குவம் விஜய்களிடம் இருக்காது.
காங்கிரஸ் கட்சியினர் முன்மொழியாத பெயரைக் காங்கிரஸ் தலைவர்களே சொல்லாத நிலையில், ராகுல் காந்திக்கு கிடைக்க வேண்டிய மரியாதை குறித்து தவெக புரிந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தாமாக முன்வந்து ஆதரவு தெரிவித்த நிலையில், தவெகவுக்கு காங்கிரஸ் கட்டுப்பட்டதா அல்லது காங்கிரஸ் தவெகவுக்கு கட்டுப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
தவெகவை லெப்ட் ஹேண்ட் டீல்
மாணிக்கம் தாகூர் 4 நாட்களுக்கு முன்பு, "விஜய் வழக்கமா பேச மாட்டார், இந்த விவகாரத்திலும் பேச மாட்டார்'ன்னு தான் நினைக்கிறேன். விஜய் பேசினாதான் அது தவெகவின் கருத்து.. மற்றவர்கள் ரசிக மனப்பான்மையில் பேசுவது தவெக கருத்து இல்லைன்னு உடைச்சு அடிச்சிட்டார். அதாவது தவெகவை லெப்ட் ஹேண்ட் டீலிங்குள்ள கொண்டு போய் நிறுத்தி விட்டார்.
விஜய் இது குறித்து பேச மாட்டார்.. சர்ச்சை இப்போது பொதுவெளிக்கு வந்துவிட்டது. இதற்குவிஜய் பதில் சொல்ல வேண்டும்தானே? பிரதமராகும் ஆசை எனக்கு இல்லை என்று சொல்ல வேண்டும்தானே? இதுவரைக்கும் அமைதியாக இருக்க காரணம், இப்படியொரு பேச்சை விஜய் உள்ளூர ரசிக்கிறார்.
ராகுலை பிரதமர் என்று விஜய் சொல்ல மாட்டார். ராஜேஷ் குமார் சொன்னதை போல ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லாவிட்டால் மந்திரி பதவியை இழக்கக்கூடத் தயார் என்கிறார்கள். ஒருவேளை காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றால், காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு பெரும்பான்மையானவர்கள் விஜய்க்கு ஆதரவாக வந்து நிற்பார்கள்.
திமுக எடுக்க போகும் அடுத்த ரூட்
சமீபத்தில் வந்த சர்வே ஒன்றில் மோடி, ராகுலுக்கு அடுத்தபடியாக விஜய் 3வது இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டதை காங்கிரஸ் கட்சியே கடுமையாக விமர்சிக்கிறது. மாணிக்கம் தாகூரின் கோபமும் ஆதங்கமும், "எங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களை நம்பிவந்தால், நீங்களும் எங்களை இப்படிப் பழிவாங்குகிறீர்களா" என்பதன் வெளிப்பாடே ஆகும். ஜெயலலிதா மோடியா லேடியா என்று கேட்டதைப் போல, விஜயும் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த நினைக்கிறார்.
திமுக, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு இனி ஒருபோதும் செல்லாது. இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் அல்ல முகம், ஆம் ஆத்மி ஒரு முகம், திருணாமுல் காங்கிரஸ் ஒரு முகம், அதேபோல ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஒரு முகம், மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கக்கூடிய தேசியவாத காங்கிரஸ் ஒரு முகம் என்று இப்பட பல முகங்கள் அந்த கூட்டணிக்கு இருக்கின்றன
.
அப்படிப்பட்ட மாநில முகங்களாக இருந்து இந்தியா கூட்டணி வலிமை அடைய வேண்டும் என்று சொன்னால், அதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும். ஆனால், காங்கிரஸ் இந்தியா கூட்டணியை லீட் செய்தால், அந்த இந்தியா கூட்டணிக்குள் திமுக ஒருபோதும் இருக்காது.
இந்தியா கூட்டணியில் திமுக?
மம்தா பானர்ஜியுடைய பார்மெட்டைதான் திமுகவும் செய்கிறது.. "காங்கிரஸை விட வலிமையாக நான் இருந்து பாஜகவை விரட்டி அடிப்பேன், எனக்கு காங்கிரஸோடு இருந்து சண்டை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, காங்கிரஸ் என்னுடைய பலத்தைத்தான் பயன்படுத்தும், எனக்கு ஒரு பலமும் காங்கிரஸால் கிடைக்காது" என்றார் மம்தா..
அதுதான் இங்கு தமிழ்நாட்டின் நிலைமை. காங்கிரஸ் என்கிற பொதி சுமக்கும் கழுதையைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை. அரசியல் களத்தில் மூன்றாவது அணி அமையும் சூழல் உள்ள நிலையில், அதில் திமுக ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். ப.சிதம்பரம் சொன்னது போல 3வது அணி உருவாகும்போது திமுக அதில் தனது பங்கைச் செய்யும்" என்று விரிவாகவே பேசியிருக்கிறார்

கருத்துகள் இல்லை: