வியாழன், 27 ஜூன், 2019

3 ஆண்டுகளில் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உட்பட 27 விமானங்களை இந்தியா இழந்துள்ளது

மூன்று ஆண்டுகளில் 27 விமானங்களை இழந்தது இந்தியா!மின்னம்பலம் :
இந்திய விமானப் படை கடந்த மூன்று ஆண்டுகளில் 27 விமானங்களை இழந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஷிரிபத் நாயக் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இந்திய போர் விமானங்கள் இழப்பு குறித்து ஜூன் 27ஆம் தேதி மக்களவையில் எழுத்துபூர்வமாக ஷிரிபத் நாயக் அளித்துள்ள பதிலில், “15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உட்பட 27 விமானங்களை இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் இழந்துள்ளது. பெரும்பாலும் விபத்துகளில்தான் விமானங்கள் இழக்கப்பட்டுள்ளது. இதில் 11 விபத்துகளில் மட்டும் ரூ.524,4 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

“இதில் 2016-17 நிதியாண்டில் ஆறு போர் விமானங்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள், ஒரு போக்குவரத்து விமானம், ஒரு பயிற்சி விமானம் உட்பட 10 விமானங்களை இந்திய விமானப் படை இழந்துள்ளது. 2017-18 நிதியாண்டில் இரண்டு போர் விமானங்கள், ஒரு பயிற்சி விமானத்தை இந்திய விமானப் படை இழந்துள்ளது. 2018-19 நிதியாண்டில் விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற மிக் 21 உட்பட ஆறு போர் விமானங்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள், இரண்டு பயிற்சி விமானங்கள் என ஒன்பது விமானங்களை இந்திய விமானப்படை இழந்துள்ளது.
அபிநந்தன் சென்ற மிக் 21 விமானம் விபத்துக்குள்ளான அதேநாளில் காஷ்மீரில் எம் 17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் ஆறு விமானப் படை வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல கடந்த மாதம் அருணாசலப் பிரதேசத்தில் நடந்த விமான விபத்தில் ஏ 32 விமானத்தில் சென்ற 13 விமானப் படை வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: