செவ்வாய், 25 ஜூன், 2019

விகிதாசார தேர்தல் முறை தீவிரவாதிகளுக்கு ஒரு மேடையை கொடுத்துவிடும்


தமிழக / இந்திய தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தொகுதிகளில் பெற்ற வாக்கு அடிப்படையில் தெரிவு செய்யப்படாமல் ,கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் என்ற அடிப்படையில் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறை பற்றி போதிய விளக்கம் இல்லாமலேயே பலரும் அது பற்றி அது மிகவும் சிறந்த முறை என்று கருத்துக்கள் தெரிவிக்கின்றனர் ..
இந்த விகிதாசார தேர்தல் முறை என்பது உண்மையில் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு மிகவும் ஆபத்தான முறையாகும்.
இதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன.
மிகவும் எளிதாக தெரியும் சில தீர்வுகள்  பல புதிய சிக்கல்களை கொண்டிருப்பவையாகும்.
Too good to be true என்பது போல் இது ஒரு சிலந்தி வலை என்பதே எனது கருத்து.
உதாரணமாக பிரான்சில் இந்த முறை முன்பு பரீட்சித்து பார்க்கப்பட்டது . அதனால் அந்த நாட்டில் மிகபெரும் இனவாத கட்சி ( Front National) தலை எடுத்தத்து. அது வரை ஒரு தொகுதி அல்லது இரு தொகுதிகள் மட்டுமே பெற்று வந்த அந்த கட்சி 35 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தது
அதன் பின்பு பிரான்ஸ் அரசானது விகிதாசார முறையயை கைவிட்டது.
தமிழகத்தில் விகிதாசார முறை அமுல் படுத்த பட்டால் ..
தமிழகத்தில் பல குஜராத்தி மார்வாடி கேரளா கன்னட ஆந்திர பிகார் ஓடிஸா எம் எல் ஏக்களும் எம்பிக்களும் தெரிவாகும் சாத்தியம் உண்டாகும்.
எந்த தொகுதியிலும் பெரும்பான்மையாக இல்லாத மார்வாடிகளும் இதர மாநிலத்தை சேர்ந்தவர்களும் முழு மாநில அளவிலான தங்கள் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில் தங்கள் மொழிபேசும் எம் எல் ஏக்கள் அல்லது எம்பிக்களை தெரிவு செய்ய முடியும் .
அவர்கள் தமிழக அரசு மீது தங்கள் அதிகாரத்தை பலவழிகளிலும் செலுத்த அது வழி சமைத்து விடும்

தமிழகத்தின் ஆதாரத்தையே ஆட்டம் காண செய்து விடுவார்கள்.
இன்னும் இது போன்ற பல சிக்கல்கள் விகிதாரார முறையால் ஏற்படும் .
இதில் ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்வா மற்றும் இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துவிடும் ஆபத்தும் உள்ளது.

Durai Ilamurugu விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் பல இனங்கள் உள்ள நம் நாட்டில் சரியாகாது.மாநில  சுயாட்சி ஓர் தீர்வாக இருக்கும்

Radha Manohar கடந்த பத்து ஆண்டுகளில் வடஇந்திய தொழிலாளர்களும் வியாபாரிகளும் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருவது தெரிந்ததே. குறிப்பாக மார்வாடிகளின் ஆதிக்கம் பல மாவட்டங்களில் அபரிமிதமாக அதிகரித்திருப்பதும். அண்டை மாநிலங்களில் இருந்தும் கணிசமான தொகையினர் தமிழத்தில் நிரந்தரமாக தங்கி இருப்பதுவும் தமிழகத்தின் அரசியலில் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.

தமிழகத்தில் அரசியல் ரீதியான தாக்கம் எதுவும் இவர்களால் ஏற்படாதவரை இதில் பிரச்சனை இல்லை!
ஆனால் தற்போது இவர்களால் அரசியல் ரீதியான பிரச்சனைகளை தமிழகம் சந்திக்க தொடங்கி இருக்கிறதோ என்று யோசிக்க வேண்டியுள்ளது. ஆர் எஸ் எஸ் இன் தாக்கம் தமிழகம் தவிர்ந்த இதர மாநிலங்களில் சற்று அதிகமாக இருப்பதால் இந்த விடயத்தை பற்றி கடுமையாக அலச வேண்டிய நிர்பந்தம் உள்ளது .
தமிழக ஊடகங்களிலும் அரசியலிலும் ரங்கராஜ் பாண்டே , எச்ச.ராஜா போன்ற ஆர் எஸ் எஸ் பார்ப்பனர்கள் (பிகாரி ) எச்.ராஜ சர்மா (பிகாரி ) தமிழகத்தின் போக்கை திசை திருப்பும் சதியில் ஈடுபடுவது பெரும் ஆபத்தாகும்.

இது மட்டும்மல்ல , இதை விட மோசமான ஒரு நிலை தமிழகத்திற்கு ஏற்படும் சாத்திய கூறுகள் உள்ளன... இந்த பின்னணியில்தான் தேர்தல் முறை மாற்றம் என்ற கோரிக்கையை கவனிக்க வேண்டும்!

கருத்துகள் இல்லை: