திங்கள், 31 ஆகஸ்ட், 2026

இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாவதில் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய பணி

May be an image of dais, temple and text
May be an image of text that says "இலங்கை -இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு"

 ராதா மனோகர் : வெட்கம் இல்லை வெட்கம் இல்லை இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை!
இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாவதில் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய  பணி சிறப்பானது.
இன்னும் சரியாக சொல்லப்போனால் அவரின் அரசியல் வாழ்வில் உருப்படியான ஒரே ஒரு விடயமும் அதுதான்.
அந்த ஒப்பந்தம் உருவாவில் அவர் ஆற்றிய பணியையும் அதில் உள்ள சாதகமான விடயங்களை பற்றியும் விரிவாக ஒரு நூலை திரு அமிர்தலிங்கம் அவர்கள் எழுதியுள்ளார் 
புலிகள் அந்த ஒப்பந்தத்தை மூர்க்கமாக எதிர்த்து அதில் பங்காற்றியவர்களை எல்லாம் தேடி தேடி கொன்றொழித்தார்கள் 
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அந்த நூலை தேடி தேடி தீயிட்டு கொளுத்தினார்கள் 
எந்த தமிழக இலங்கை பத்திரிகையிலும் அமிர்தலிங்கம் அவர்கள் இது பற்றி எழுதியது எதுவும் பிரசுரமாகவில்லை.
இந்த சூழ்நிலையில் அந்த ஒப்பந்தம் பற்றியும் அது உருவான புறசூழல் அகச்சூழல் பற்றி அறிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.


இந்த நிலையில் திரு அமிர்தலிங்கம் எழுதிய அந்த நூல் மட்டுமே ஒரு ஒரு சாட்சியமாக இருந்தது 
அது ஒருவரிடத்திலும்  இருக்கவில்லை 
எனது தேடலில் ஒரே ஒரு மங்கிப்போன போட்டோ காப்பி பிரதி ஒன்று இருப்பதாக திரு ரூபசங்கரி அவர்கள் கூறினார் 
அவரின் உதவியால் அதை பெற்று டைப் செய்து எனது வலைதளலத்திலும் முகநூலிலும் பதிவு செய்தேன்.
திரு அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபனிடம் இந்த பிரதிகளை கொடுத்தேன் 
பின்பு இதை நூலக வெளியிட போவதாக கூறினேன்.
அதற்கு அவர் அதில் கைபோடவேண்டாம் .
திரு நெடுமாறன்  எழுதிய சுயநிர்ணய உரிமை பற்றிய கட்டுரை ஒன்றையும் சேர்த்து இதை வெளியிடுவார் என்றும் கூறினார்.
ஒரு வருடம் கழிந்தது . நெடுமாறன் அப்படி ஒரு நூலும் வெளியிட்டதாக தெரியவில்லை.
பின்பு இந்த விபரங்களை திரு கௌரா ராஜசேகரன்  Gowra 
Rajasekaran  அவர்களிடம் கூறினேன் 
அதற்கு அவர் தானே இந்நூலை வெளியிடுவதாக கூறினார் 
அவருக்கு என்னிடம் இருந்த மூல பிரதியை அனுப்பி வைத்தேன் 
அவர் அந்நூலை ( இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு)  சிறப்பான முறையில் வெளியிட்டார்.
ஒரு புத்தக கண்காட்சியில் இந்த நூலை கண்ட ஆசிரியர் திரு வீரமணி அவர்கள் நாங்கள்தான் ஏற்கனவே இந்த நூலை  கொழுத்தி உள்ளேமே . நீங்கள் ஏன் மீண்டும் இதை கொண்டு வருகிறீர்கள் என்று கூறினாராம்.
இதே ஆசிரியர் வீரமணியை சில ஆண்டுகளுக்கு முன்பு  Dr.பகீரதன்  அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்த  அமிர்தலிங்கம் நினைவு பேருரை நிகழ்ந்த வைத்தார்.
தன் தந்தையின் நூலை தீயிட்டு  கொளுத்தியவர்களையே  நினைவு அஞ்சலிக்கு அழைத்திருக்கிறார் பகீரதன்.
வெட்கம் இல்லை வெட்கம் இல்லை இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை!
முன்னாள் இலங்கை எதிர்க்கட்சி தலைவர் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 99 ஆவது நினைவஞ்சலி கட்டுரை See less

கருத்துகள் இல்லை: