திங்கள், 31 ஆகஸ்ட், 2026

சிறுமியரை வேலைக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை தந்த தொழிலதிபர் வீரமணி :

 dinamalar.com  : சென்னை: வீட்டு வேலைக்கு என, சிறுமியரை சென்னைக்கு அழைத்து வந்து, தொழில் வர்த்தகர் வீரமணி, 85, பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கிரானைட் தொழில் வர்த்தகர் வீரமணி. இவர், 'போக்சோ' சட்டத்தின் கீழ், சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 
அவரது வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:


வீரமணியிடம் பல ஆண்டுகளாக, மகேந்திர சிம்கன், 63, என்பவரும், அவரது மனைவி சாந்தியும், 60, வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் தோறும் பல லட்சம் ரூபாயை வாரி வழங்கி உள்ளார். சிறுமியருடன் நெருக்கமாக இருக்கும் பழக்கம் உள்ள வீரமணி, அதற்காக தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அதில், மகேந்திர சிம்கன், சாந்தி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

அவர்கள் வாயிலாக, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, 13 - 16 வயதுடைய சிறுமியரை, வீட்டு வேலைக்கு என, சென்னை அழைத்து வந்து, வீரமணி நெருக்கமாக இருந்து, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த, 2019ல் இருந்து, இத்தகயை செயலில் ஈடுபட்டுள்ளார். தேனாம்பேட்டை தவிர, வேறு ஒரு இடத்திலும், சிறுமியர் மற்றும் பெண்களுடன் வீரமணி நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்து விசாரணை நடக்கிறது.

மகேந்திர சிம்கன், சாந்தி ஆகியோர் தங்கி இருந்த வீடு மற்றும் வீரமணியின் வீட்டில் இருந்து, பல, 'வீடியோ' பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிறுமியர் மற்றும் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போது, சாந்தி வாயிலாக, வீரமணி வீடியோ எடுத்து, அதை பார்த்து ரசித்து வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரிக்க வேண்டி இருப்பதால், வீரமணி உள்ளிட்ட மூவரையும் காவலில் எடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: