புதன், 26 ஜூன், 2019

பிரேமலதாவிடம் எகிறிய நிர்வாகிகள்.. உங்க சொத்தை மீட்க எங்க பணம் வேண்டுமா?

premalathaவெப்துனியா :பிரேமலதா விஜயகாந்த் ஏலத்திற்கு வந்த சொத்தை மீட்க மாவட்ட நிர்வாகிகளிடம் நிதி திரட்ட முற்பட்டது தோல்வியில் முடிந்துள்ளதாம். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கட்ட வேண்டிய கடன் தொகை ரூ.5.52 கோடியை கட்டாததால் அவரது சொத்துக்களை ஏலத்தில் விடப்போவதாக வங்கி அறிவித்தது. ஏலத்தில் விஜயகாந்திற்கு சொந்தமான வீடு,  ஆண்டால் அழகர் கல்லூரில், நிலம் மற்றும் வணிக கட்டடம் அடங்கும்.
எனவே, தேமுதிக கூட்டத்தை கூட்டிய பிரேமலதா செயளாலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் சொத்துகள் ஏலத்தில் வந்திருப்பது பற்றி உருக்கமாக பேசினாராம். பின்னர் ஏலத்திற்கு வந்துள்ள சொத்தை மீட்க நிதி திரட்டி தரும்படி கேட்டாராம்.

 இதனால் கடுப்பான நிர்வாகிகள், தேர்தல் செலவுக்கு கட்சி தலைமை பணம் தருவதே இல்லை. அத்தனை பேரும் கடனை வாங்கி சொத்துகளை விற்றுதான் செலவு செய்தோம். இப்போது உங்க சொத்துகளை மீட்க எங்களை நிதி வசூல் செய்து தர சொல்வது நியாயமா? என கேட்டு நிதி திரட்டித்தர மறுத்துவிட்டனராம்.

கருத்துகள் இல்லை: