புதன், 26 ஜூன், 2019

அதிமுகவை கழட்டி விட்டு திமுக பக்கம் போகும் பாஜக!அதிர்ச்சியில் அதிமுக!

நக்கீரன் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக பெரிய வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து
இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் பாஜக தலைமைக்கு கடும் அதிருப்தியில் இருந்தது. மேலும் இந்த தோல்வி குறித்து தமிழக கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்த பாஜக தலைமை, கட்சி நிர்வாகிகள் கூறிய பதிலால் அதிர்ந்து போயுள்ளனர். அதில் கூட்டணி காட்சிகள் யாரும் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், அதிமுக இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தியது என்று கூறியுள்ளனர். அதனால் நாடாளுமன்ற தேர்தலை பெரிதளவில் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் பாஜக தலைமைக்கு எடப்பாடி அரசு மீது கோபம் உள்ளதாக கூறுகின்றனர்.
சமீப காலமாக அதிமுக அரசை பெரிதாக பாஜக கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த கோபத்தை போக்க தமிழக அரசு சார்பாக யாகம் நடத்தியுள்ளனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதிமுக அரசை விமர்சிக்க பாஜக தலைமை தமிழக நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களுக்கு பேசவும், கேள்வி கேட்கவும் அதிக வாய்ப்பு வழங்கி கொஞ்சம் இணக்கமாக பாஜக செல்கின்றனர் என்று ஒரு பேச்சும் வந்து கொண்டிருக்கிறது. மேலும் துணை சபாநாயகர் பதவியை ஜெகன் மோகன் ரெட்டி வேண்டாம் என்று கூறிய நிலையில், அந்த பதவியை திமுகவிற்கு கொடுக்கப்படலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவில் நிகழும் உட்கட்சி பூசல் விவகாரத்திலும் பாஜக எந்த ஆலோசனையும் தற்போது வழங்குவதில்லை என்று தெரிகிறது. பாஜகவின் இந்த நடவடிக்கையால் அதிமுக தலைமைக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: