புதன், 26 ஜூன், 2019

மேட்டுப்பாளையத்தில் அரங்கேற்றப்பட்ட சாதி ஆணவப்படுகொலை ; குடும்பத்தாரே வெட்டிக்கொன்ற கொடூரம்!

Imagenews7.tv  ; மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியினை சேர்ந்த கனகன் என்ற வாலிபர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தர்சினி பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேட்டுப்பாளையம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த அன்றே புதுமண தம்பதியர் அரிவாளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதில் மணமகன் கனகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை மணந்து கொண்ட தர்சினி பிரியாவும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மணமகனின் சகோதரரே இந்த சாதி ஆணவக் கொலையில் ஈடுபட்டது அதிர்ச்சியினை உண்டாக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள இந்த சாதி ஆணவப்படுகொலை திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டது எனவும், முன்பே கனகனும் - தர்சினி பிரியாவும் திருமணம் செய்துகொண்டால் வெட்டி ஆற்றில் வீசுவோம் என கனகனின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர் தர்சினி பிரியாவின் பெற்றோரும் அவரது உறவினர்களும்.

கருத்துகள் இல்லை: