ஞாயிறு, 23 ஜூன், 2019

இந்தியாவின் மத தீவிரவாதம் .. அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா ..

Hindu-majority Bharatiya Janata Party (BJP) made inflammatory speeches against minority communities. Mob attacks by violent extremist Hindu groups against minority communities, especially Muslims, continued throughout the year amid rumors that victims had traded or killed cows for beef. According to some NGOs, authorities often protected perpetrators from prosecution. As of November, there were 18 such attacks, and eight people killed during the year. On June 22, two Uttar Pradesh police officers were charged with culpable homicide after a Muslim cattle trader died of injuries sustained while being questioned in police custody.

மின்னம்பலம் : இந்தியாவில் மதம் சார்ந்து நடத்தப்படும் கொடுமைகள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்திய அரசு பதிலளித்துள்ளது.
சர்வதேச சுதந்திரம் பற்றி அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் 2019ஆம் ஆண்டிற்கான சர்வதேச சுதந்திர அறிக்கையை அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், நாடு வாரியாக ஒவ்வொரு நாட்டிலும் மதரீதியாக நடக்கும் கொடுமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமிய வழக்கங்களையும் நிறுவனங்களையும் பாதிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்படுவதாகவும், சிறுபான்மையினர், விளிம்புநிலை சமூகங்கள், அரசை விமர்சிப்பவர்கள் மீது கும்பல்கள் தாக்குதல் நடத்துவதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கும்பல்கள் நடத்தும் வன்முறைகள், சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக தலைவர்கள் வெளியிடும் கருத்துகள் என பல்வேறு விவகாரங்கள் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள், தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்கள் எனப் பல தரப்புகளிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மின்னம்பலத்தில் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், அமெரிக்காவின் கருத்துக்கு இந்திய அரசு பதிலளித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா தனது மதச்சார்பற்ற நற்சான்றுகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற அந்தஸ்து, பன்முகத்தன்மை கொண்ட சமூகம், சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கான நீண்டகால அர்ப்பணிப்பு குறித்து பெருமைகொள்கிறது. சிறுபான்மை சமூகங்கள் உட்பட இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயக நாடு என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மதச்சுதந்திரத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பளிக்கிறது. ஜனநாயக ஆட்சிமுறையும், சட்டங்களும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கின்றன. நமது குடிமக்களின் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் பற்றி பேசுவதற்கு எந்தவொரு வெளிநாட்டு அரசுக்கோ, அமைப்புக்கோ தலையீட்டுரிமை இருப்பதாக தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவின் ஊடகப் பிரிவுத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அனில் பலுனி நேற்று (ஜூன் 22) பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்தியாவில் இருக்கும் ஆழமான ஜனநாயக அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. அதேபோல நீதித்துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் பிரச்சினைகளை கையாண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் மிகப்பெரிய திட்டம் இருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது முற்றிலும் பொய்யானது.
உள்ளூர் பிரச்சினைகள், குற்ற மனப்பான்மை கொண்டவர்களால்தான் பெரும்பாலான பிரச்சினைகள் உருவாகியுள்ளன. மோடி அரசு அறிமுகப்படுத்தி, செயல்படுத்திய திட்டங்களால் அனைத்து சாதி, மத, மாநில மக்களும் சமமாக பயனடைந்துள்ளனர். மதம், பாலினம் என்ற பாகுபாடுகளின்றி சமூகத்தின் ஏழை, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியதற்கு பாஜக பெருமை கொள்கிறது. பாஜகவின் வளர்ச்சி நோக்கங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த அறுதிப் பெரும்பான்மையே சான்று” என்று தெரிவித்துள்ளார்.   https://www.state.gov/reports/2018-report-on-international-religious-freedom/india/

கருத்துகள் இல்லை: