வியாழன், 27 ஜூன், 2019

சசிகலா புஷ்பா : பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்!'

சசிகலா புஷ்பா
.vikatan.com - ந.பொன்குமரகுருபரன் : `ஜெயலலிதா
என்னை அடித்தார்' என மாநிலங்களவையிலேயே குண்டை வீசியெறிந்து, தமிழக அரசியலை அதிரிபுதிரி ஆக்கியவர் அ.தி.மு.க, எம்.பி. சசிகலா புஷ்பா. அதிரடிக்குப் பெயரெடுத்தவர், அடுத்த குண்டை வீசியுள்ளார். `தமிழகத்தில் மோடியின் ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி பிறக்கும்’ என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.; ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களில், நான்கு பேர் சமீபத்தில் பா.ஜ.க-வில்
இணைந்தனர். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறியதால், சட்டப்படி அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயவில்லை. இதே பாணியில், மாநிலங்களவையிலுள்ள அ.தி.மு.க. எம்.பி-க்களை வளைக்கும் பொறுப்பை சசிகலா புஷ்பாவிடம் பா.ஜ.க தலைமை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: