

அந்த கோபத்தை வெளிப்படுத்திய அவர், தேனியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டலில் இருந்து கேரளாவிற்கு சென்று ஒரு ரகசிய இடத்தில் தங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது, ‘‘தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் சேரப்போகிறாரா? திமுகவில் சேரப்போகிறாரா? பாஜவில் சேரப்போகிறாரா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான விஐபி தான் தங்கதமிழ்செல்வனை இயக்கி வருகிறார். தற்போது அவர் யார் என்பது பற்றி வெளிப்படையாக கூற முடியாது. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தங்கதமிழ்செல்வன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஓரிரு நாளில் அத்தனை குழப்பங்களுக்கும் விடை கிடைக்கும். தங்கதமிழ்செல்வன் வெகு விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டினை தெரிவிப்பார்’’ என்றனர். இந்நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ்சை தாண்டி தேனி மாவட்ட அரசியலில் ஜொலிப்பது சிரமம். ஏனெனில் இப்போது அதிமுகவில் ஓபிஎஸ் கைதான் ஓங்கியுள்ளது.
இதனால் அதிமுகவில் சேருவது சரியாக இருக்குமா என்ற குழப்பத்திலும் தங்க தமிழ்செல்வன் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாஜவில் சேருவதற்காக தூது விட்டுள்ளாராம். இதனால், இன்றோ அல்லது நாளையோ தங்க.தமிழ்செல்வன் தனது முடிவை அறிவிப்பார் என்றும், அவர் அதிமுக தவிர இன்னொரு முக்கிய கட்சியில் கூட சேரலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக