சனி, 5 செப்டம்பர், 2026

அப்படிப்பட்ட காமராஜர் எப்படி தமிழின மொழிப்போர் வீரர்களுக்கு ஆதரவு தருவார்?

புகச்சோவ் புகச்சோவ் :  1965ல் மத்திய சட்ட அமைச்சர் 
அசோக் சென், ஆட்சிமொழி சட்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். 
அதில் ஹிந்திபேசாத மாநிலங்களில் நூற்றுக்கு எழுபது சதவீத மாநிலங்கள் என்றைக்கு ஆங்கிலம் தேவையில்லை.
 ஹிந்தி போதுமென சட்டசபைகளில் தீர்மானம் இயற்றுகிறார்களோ! 
அப்போது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலம் நீக்கப்பட்டு, 
முழுமையாக ஹிந்திமொழியே பயன்படுத்தப்படும் என்கிற ஷரத்தை கொண்டுவந்தார்.
இந்த ஷரத்தை ஒப்புக்கொள்ளும்படி அன்றைய கேரளா,தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில ஆளுநர்களுக்கு மனுவை அநுப்பியது, 
அன்றைய காங்கிரஸ் தலைவரான காமராஜர்தான். அப்படிப்பட்ட காமராஜர் எப்படி தமிழின மொழிப்போர் வீரர்களுக்கு ஆதரவு தருவார்....!?
இந்த ஷரத்தானது ஜவகர்லால்நேருவை மீறி, மேற்குவங்கத்தின் காங்கிரஸ் பிராமண லாபியான பிசி.சென்னும், மத்திய சட்ட அமைச்சர் அசோக்சென்னும், நம்ப ராஜாஜி மற்றும் காமராஜ் கர்மவீரும் சேர்ந்து மூளையை கசக்கி தயாரித்ததாகும். 
என்றைக்குமே ஆங்கிலத்தை ஒழிப்பதில் நேருவுக்கு விருப்பமிருக்காது என தெரிந்துகொண்டே, காங்கிரஸ் தலைவர் பதவியை தக்கவைக்க வேண்டி, காமராஜர் கர்மவீரத்தை நமது தமிழ்மொழியின்மேல் காட்டினார்.
இன்னிக்கு தேதியில், ஆந்திரா கர்நாடகா ஒரிசா தெலங்கானாவின் ஆட்சியை பாஜக கைப்பற்றினால்கூட, 
கேரளமும் தமிழ்நாடும் இந்தியை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதுதான், அந்த காமராஜ் கொண்டுவந்த ஷரத்தின் சூட்சுமம்.
படிக்காத மேதைகளோட லட்சணம் எப்படியிருக்குமென்பதற்கு, நேருவையும் காமராஜரையும் தராசில் வைத்துப்பார்த்தால் கண்டுபிடித்துவிடலாம்.

கருத்துகள் இல்லை: