வியாழன், 27 ஜூன், 2019

அடுத்த 5 ஆண்டுகளில் வண்டிகள் அனைத்துமே மின்சாரத்தில்.... ?


Muralidharan Pb : மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி. தேர்தலைக் காரணங்காட்டி மிக தாமதமாக அறிவித்திருப்பது அதன் சுய நலமே. இருப்பினும் இதை இன்றாவது அறிவித்தார்களே என்று வரவேற்போம்.
அடுத்த 5 ஆண்டுகளில் வண்டிகள் அனைத்துமே மின்சாரத்தில் ஓடுமாறு தயாரிக்க முனைப்பு காட்டிட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அரசு தெரிவித்து உள்ளது. அரசு தானாக முன்வந்து இதை அறிவிக்கவில்லை. உலக சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு பல்வேறு உலக கூட்டமைப்புகள் இந்த முடிவை அனைத்து நாடுகளுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது. நமது அரசு இதை

அடுத்த தலைமுறையையும் சுற்றுப் புற சூழலையும், பெருகிவரும் எரிபொருள் விலையையும், அடுத்த 80 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பெட்ரோலியம் கச்சா எண்ணையை மனதில் கொண்டு இந்த முடிவை நாம் வரவேற்றுதான் ஆக வேண்டும்.
ஆனால், பெரு நிறுவனங்கள் உதாரணமாக பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டார்ஸ், டிவிஎஸ் இதை வரவேற்கவில்லை. உள்ளபடியே அவர்களுக்கு இது பெரும் நட்டத்தை கொடுக்கவல்ல முடிவு. பல்லாயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்துள்ளார்கள், பல கனவுகளை நோக்கி இவர்கள் பயணிக்கிறார்கள், எல்லாவற்றையும் விட பல லட்சம் பேர் நேரடியாகவும், கோடிக்கணக்கில் மறைமுகவமாகவும் வேலை இழக்க நேரிடும். வேலை இழப்பை ஏற்படும் அந்த குடும்பங்களுக்கு நாம் உள்ளபடியே கருணை காட்டிடத்தான் வேண்டியுள்ளது. காரணம், இதில் அதிகம் பாதிக்கப் போவது நடுத்தர, மற்றும் ஏழைக் குடும்பங்கள். ஆனால் வேறு வழி இல்லை.
ஒரு காலத்தில் டைப் ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட் போன்றவை பெருகி இருந்தன. இன்று டைப்பிங், ஷார்ட் ஹாண்ட் தெரியாமல் ஒரு தலைமுறை இயங்குகிறது. அன்று அதையே நம்பி இருந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலையை பற்றி யார் கவலைப் பட்டது?
இதில் கவனிக்கப் படவேண்டிய ஒரு transformation உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கோட்ரேஜ் நிறுவனம் டைப் ரைட்டர்களை தயாரித்துக் கொண்டிருக்கையில், நமது நாட்டை கம்ப்யூட்டர் ஆக்கரமித்த போது உணர்ச்சிவயப்படாமல், அறிவுப்பூர்வமாக கம்ப்யூட்டர் இறக்குமதியில் இறங்கி வென்றது. பிறகு அதில் தொய்வு ஏற்பட்ட போது, அதில் இருந்து விலகி நிறுவனத்தை விற்றுக் கொண்டு வெளியேறியது. எனவே காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை நாம் மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.
முத்தாய்ப்பாக ஒன்று சொல்லி முடிக்கிறேன். இன்று அலறும் இந்த நிறுவனங்கள் ஒரு காலத்தில் அரசு துணையோடு, SEZ, தொழிற்பூங்கா என்று பல லட்சம் ஏக்கர் ஏழைகளின் நிலத்தை மட்டமான விலைக்கு வாங்கிய போது அன்று அந்த உழவர்கள் இப்படித்தானே அலறி இருப்பார்கள்?
எல்லாத்துக்கும் payback நேரம் ஒன்று உண்டல்லவா ? சிலருக்கு அடுத்த தலைமுறையில் நடக்கும் சிலருக்கு இந்தத் தலைமுறையே நடக்கும்.
எல்லோரும் போல சொல்லவேண்டுமானால்

கருத்துகள் இல்லை: