செவ்வாய், 25 ஜூன், 2019

தலையில் கதற கதற ஊசியால் தைக்கும் துப்பரவு பணியாளர் . கூத்தா நல்லூர் அரசு மருத்துவமனையில் க

கதறுகிறார் அதிர்ச்சி கோணிப்பை துப்புரவு பெண் tamil.oneindia.com - hemavandhana :
தலையில் காயமடைந்தவருக்கு தையல் போட்ட துப்புரவு பெண் -வீடியோ மன்னார்குடி: "ம்மா.. வலிக்குதும்மா.. என்னால முடியல..." என்று இளம் பெண் கதறும் குரல் நெஞ்சில் இடியாய் விழ... துணி தைப்பது போல படுகேஷூவலாக அந்த பெண்ணின் தலையில் ஊசியை குத்தி, தையல் போடுகிறார் துப்புரவு பெண் ஒருவர்! கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில்தான் இந்த கூத்து நடந்துள்ளது! திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கு போதுமான டாக்டர்கள், நர்ஸ்கள், அட்டண்டர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதனால், இங்கு இருக்கிற நர்ஸ்களே எல்லாவிதமான மருத்துவத்தை பார்ப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் கொடுமை, ஆஸ்பத்திரியை பெருக்கி சுத்தம் செய்யும் துப்புரவு பெண்கூட ட்ரீட்மெண்ட் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



துப்புரவு பெண்

இப்படி ஒரு வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. 2 நாளைக்கு முன்னாடி, ஒரு இளம்பெண்ணுக்கு முன்தலையில் அடிபட்டது. அதனால் அவசரத்துக்கு இந்த ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்துவிட்டார். வழக்கம்போல், டாக்டர் இல்லை. நர்ஸ் மட்டும் இருந்திருக்கிறார். அந்த நர்ஸோ, பக்கத்தில் நின்று கொண்டிருந்த துப்புரவு பெண் பணியாளரிடம் பெண்ணுக்கு தையல் போடும்படி சொல்லி உள்ளார்.



கோணிப்பை

மயக்க ஊசி, மருந்து எதுவுமே தராமல் பெண்ணை அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்துவிட்டார் அந்த துப்புரவு பெண். ஏதோ கிழிந்த கோணிப்பையை அசால்ட்டாக ஊசியால் குத்தி தைப்பதைபோல, தையல் போட ஆரம்பித்துவிட்டார்.



கதறுகிறார்

ஏற்கனவே ரத்தம் ஒழுகி, அடிபட்டு வலியால் வந்த அந்த பெண்ணோ, நேரடியாகவே மண்டையை ஊசியால் தைக்கும் வலியை தாங்கவே முடியாமல் கதறுகிறார். "ம்மா.. வலிக்குதும்மா" என்று அழுகிறார். அந்த துப்புரவு பெண்ணோ அசரவில்லை.. "இன்னும் ஒரு தையல்தான், முடிஞ்சிருச்சு" என்கிறார் கூலாக.



அதிர்ச்சி

இந்த காட்சியை, அந்த பெண்ணுடன் துணைக்கு வந்தவரே செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் போட்டுள்ளார். மயக்க மருந்து இல்லாமலேயே இப்படி ஒரு கொடூரம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது

கருத்துகள் இல்லை: