வியாழன், 9 பிப்ரவரி, 2017

சசிகலா முதல்வர் பதவி ஏற்க டெல்லியில் சுப்பிரமணியன் சாமி ஓவர்டைம் ! ஆசீர்வாதம் ஆசாரியும் உதவிக்கு!

சு சாமியின் புரோக்கர் தொழிலுக்கு மீண்டும் மவுசு வந்துள்ளது. நடராஜனின் தொடர்பில் உள்ள ஆசாரி ( 2ஜி ஆசாரி) இந்த மாதிரி சகுனி வேலையில் கைதேர்ந்தவர். அவரும் சு சாமியும் எப்படியாவது சசிகலாவை முதலமைச்சர் ஆக்கவேண்டும் என்று ஒற்றை காலில் உள்ளார்கள் . இரண்டு ஆர் எஸ் எஸ் பிராணிகளும் கைநீட்டி வாங்கின காசுக்கும் இனி வரப்போகும் காசுக்குமாக தங்கள் பரம்பரை துரோக தொழிலில் முழு மூச்சாக உள்ளார்கள் . ஆகவே சசிகலா முதலமைச்சர் ஆவார் என்றே தோன்றுகிறது?
புதுடில்லி: தனியார் டிவிக்கு பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி அளித்த பேட்டி: தமிழகத்தில் அரசியல் சாசனம் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், இதனை சிதைப்பது போல் கவர்னரின் நடவடிக்கை உள்ளது. கவர்னர் உடனடியாக சென்னை செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் பதவி விலக வேண்டும்; அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா டில்லிக்கு வந்து முறையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்கள் வசனங்கள் :
1  சசிகலா மீது சொத்து குவிப்பு வழக்கும் இவரே போடுவாராம், சசிகலா முதல்வராக வேண்டும் என்று இவரே கூறுவாராம் , கேக்குறவன் கேனையனா இருந்தா......., முதல்ல இந்த ஆள துரத்த வேண்டும்.


 2 வருங்கால பிரதமர் சின்னம்மா வாழ்க!! வருங்கால முதல்வர் சின்னம்மா வாழ்க!! வருங்கால ஜனாதிபதி சின்னம்மா வாழ்க!! வருங்கால ஆளுநர் சின்னம்மா வாழ்க வாழ்க!!

 3 நீங்க எதற்கு இப்போ "தமிழ் பொறுக்கிகளின்" விஷயத்தில் மூக்கை நுழைக்குறீர்கள்? அத நாங்க பாத்துக்குறோம். தினமலர்

கருத்துகள் இல்லை: