old news .: பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேரம் கேட்டுள்ளார். சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்றும், அவருக்கு ஆளுநர் உடனடியாக பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து வலியுறுத்திவந்தார். முன்னதாக, சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்வதன்மூலம் ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை வந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநரை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, சசிகலாவுக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மின்னமபலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக