சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் செவ்வாய்கிழமையன்று தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாகவும், எந்த நேரத்திலும் ஆளுநர் அறிவிப்பு
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் சசிகலாவுக்கு எதிரான அதிரடி பேட்டியைத்தொடர்ந்து அதிமுகவிலும், தமிழக மக்களிடையேயும் அசாதாரண சூழ்நிலை வலுத்துவருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசார் ராவ் நேற்று முன்தினம் மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்புக்குப்பின், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து, இன்று தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் மற்றும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் செவ்வாய்கிழமையன்று தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாகவும், எந்த நேரத்திலும் ஆளுநர் அறிவிப்பு வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பை குறைக்க டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளாராம். தமிழகத்தில் உள்ள அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சென்னை வர ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தமிழகத்தின் உச்சக்கட்ட பாதுகாப்பிற்கு 1,800 துணை ராணுவத்தினர் வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக