மின்னம்பல - Kavi : ஒருவழியாக ஜனநாயகன் திரைப்படம் நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அதேவேளை டிக்கெட் விலையும் தாறுமாறாக உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
முதல்வர் விஜய் நடிப்பில் கடைசியாக எடுக்கப்பட்ட படம் ஜனநாயகன். கடந்த 2026 ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாகவில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் படத்துக்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கியது மத்திய தணிக்கை வாரியம். அதன்படி படம் நாளை வெளியாகிறது. சுமார் 1000 திரையரங்குகளில் நாளை மட்டும் 5000 காட்சிகள் திரையிடப்படவுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள தியாட்டர் ஒன்றில், 700 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
இலஞ்சம் வாங்குனா என் பேர சொல்லுங்கன்னு சொல்லிட்டு, 700,800 ரூபாய்க்கு ஜனநாயகன் படத்தோட டிக்கெட்ட விக்கச் சொல்லி இருக்கீங்களா Cm Sir?@TVKVijayHQ pic.twitter.com/7qQx1yycFM
— வெறுப்பை வேரறு (@VVeraru) July 22, 2026
அதுபோன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ராயல் தியேட்டரில் அரசின் விதிகளுக்கு மாறாக கூடுதல் விலையில் ‘ஜனநாயகன்’ பட டிக்கெட் விற்கப்படுவதாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
அதில், ரூ.300க்கு பதில் ரூ800க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் வாக்குவாதம் செய்கின்றனர். பட விநியோக நிறுவனம்தான் கூடுதல் விலைக்கு விற்க சொன்னதாகவும் குறைந்த விலைக்கு டிக்கெட் வாங்கி வெளியே அதிக விலைக்கு விற்பதற்காகத்தான் ரசிகர்கள் இப்படிக் கேட்பதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
நாமக்கல், தமிழ்நாடு-
விஜய்யின் ஜன் நாயகன் படத்திற்கான டிக்கெட் விலை குறித்து ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். pic.twitter.com/6XXmzTGl5A
— SDC World (@sdcworldoffl) July 22, 2026
சென்னையை பொறுத்தவரை அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் விற்றுத் தீர்ந்துள்ளன. ஒழுங்குபடுத்தப்பட்ட விலை நிர்ணய முறையின் கீழ், சென்னையில் ஒரு டிக்கெட் அதிகபட்சமாக ரூ.190க்கு விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் இப்படி என்றால் அண்டை மாநிலமான கர்நாடகா பெங்களூருவில் ஒரு டிக்கெட் ரூ.2600க்கு விற்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
மல்டிபிளக்ஸ் சாய்வு இருக்கைகள் கொண்ட தியேட்டர்களில் ரூ.2,600 வரை விற்பனையாகிறது எனவும் பிற திரையரங்குகளில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் விஜய் ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
ஹைதராபாத்தில் ரூ.600–800, மும்பையில் ரூ.500–750, டெல்லியில் ரூ.500–700 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
முன்பதிவு அடிப்படையில் இந்தியாவில் மட்டும் ரூ.15 கோடியையும், உலக அளவில் ரூ.30 கோடியையும் ஜனநாயகன் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் படம் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
நாளை படம் வெளியாகவிருக்கும் நிலையில் சென்னையில் உள்ள திரையரங்குகளில் ஜனநாயகன் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக