இன்று வரை காத்திருந்தோம், நாளை வேறு விதத்தில் போராட இருக்கிறோம் என்று கூவத்தூரில் இருந்து சென்னை திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பேட்டியளித்துள்ளார்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று மதியம் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா திடீரென காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில் தங்கியிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நேரில் சென்று சந்தித்தார். எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, பின்னர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் சென்னை திரும்பினார். இரவு 8.30 மணியளவில் சென்னை போயஸ் கார்டன் வந்தடைந்த அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது ‘‘அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் மன உறுதியுடன் உள்ளனர். குடும்ப உறுப்பினர்களை சந்தித்ததில் மன நிம்மதியாக உள்ளது. ஆளுநர் முடிவிற்காக இன்று வரை காத்திருந்தோம். நாளை முதல் வேறு விதத்தில் போராட இருக்கிறோம். அதிமுகவில் பிளவை ஏற்படுத்தவே காலதாமதம் செய்வதாக கருதுகிறேன்’’ என்றார். maalaimalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக