சனி, 11 பிப்ரவரி, 2017

ஆளூர் ஷாநவாஸ் : தமிழகத்தின் அசல் எதிரியுடன் மோத முடியாத நிலையில் அ.தி.மு.க உள்ளது..

ஓ.பி.எஸ்ஸை பின்னால் இருந்து அல்ல; முன்னால் இருந்தே இயக்குவது பா.ஜ.க தான் என்பது அம்பலமான பிறகும், தி.மு.க.வை கைகாட்டி விட்டு சசிகலா தரப்பு பம்முவது ஏன்?
ஆளுநர் மூலம் ஜனநாயகப் படுகொலையை செய்யும் மோடி அரசை கண்டிக்கவும் களமிறங்கவும் அ.தி.மு.க தயங்குவது ஏன்?
தமிழகத்தின் அசல் எதிரியுடன் மோதுவதற்கு நெஞ்சுரம் இன்றி அஞ்சும் நிலையில்தான் அ.தி.மு.க உள்ளது. இன்றைய சிக்கல்களின் அடிப்படையே இதுதான்!
Ashwag Imbrose இதே பன்னீர்செல்வம் தான் சட்டசபையில் பொறுப்பற்ற முறையில் சென்னை மெரினா போராட்டத்தில் போலீஸ் தடியடி நடந்ததுக்கு காரணமாக ஒசாமா ஸ்கூட்டி போட்டோவ காமிச்சவர் இன்னையவரைக்கும் அந்த தீவிரவாதிகளை ஏன் கைது செய்யவில்லை இது கண்டிப்பாக பிஜேபி சதியாக தான் இருக்கணும் இன்னும் குழப்பமா இருக்கா? பாஜக RSS டவுசர்களின் முகநூல்,டிவிட்டர் பதிவுகளை பாருங்கள், எல்லாம் புரியவரும்.
Sirajudeen Babu பன்னீரைவிட சசிகலாவை ஆதரவே இப்போது பாஜக-விற்கு தேவை. இப்போது லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் 50 பேரில் இருவர் தவிர மற்ற அனைவரும் சசிகலா பின்னால்தான் நிற்கிறார்கள்.
எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்ற வேண்டுமானால் சசிகலாவின் ஆதரவு பாஜக-விற்கு தேவை. அத்துடன் மட்டுமல்லாமல் பாஜக ஆட்சி காலத்தில் வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் சார்பில் வேட்பாளராக யாராவது நிறுத்தப்படும்போது அண்ணா.திமுகவின் தயவும் தேவை. அதற்காகவாவது சசிகலாவை பாஜக பகைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்போது நடப்பது எல்லாமே சசிகலாவை வழிக்கு கொண்டுவர நடத்தப்படும் நாடகமாக தோணுகிறதது. முகநூல் பதிவுகள்

கருத்துகள் இல்லை: