ஆஹாங் ஒண்ணொண்ணா வெளியே வருது முதல்வர் பன்னீர் என்கிற சாது மிரண்டது திடீர் நிகழ்வு அல்ல என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அதிலும் பன்னீர் பக்கம் வந்து விட்ட ஒரு M.L.A ஊடகங்களுக்கு அளித்துள்ள ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் பகீர் ரகம்.
ஒரு முதல்வரை வாடா, போடா என்று பேசுவதும், சட்டையை பிடித்து இழுக்கவும் முடிகிறது என்பது மோசமான முன் உதாரணம்.
பன்னீர் தவிர வேறு யாரும் இவ்வளவு பொறுமையாக இருக்கவே முடியாது. அன்று எங்களுக்கு அழைப்பு வந்தது.
நாங்கள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு போயஸ் கார்டன் ஓடினோம். அங்கு சசிகலா மற்றும் தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன், பாஸ் என்கிற பாஸ்கரன் அனைவரும் கடும் கோபத்துடன் அமர்ந்திருக்க சற்று நேரத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் வந்து சேர்ந்தார்.
அவரை உட்காரக் கூடச் சொல்லவில்லை. அக்கா முதல்வர் ஆகணும். உன் பதவியை ராஜினாமா பண்ண வேண்டியதிருக்கும் என்றார் திவாகரன்.
பன்னீர் மெதுவாக அதற்கு இப்போ என்ன அவசரம் என்றார். படாரென்று சேரைப் பிடித்து தள்ளிவிட்டு மகாதேவன் எழுந்தார்.
முதல்வர் பயப்படவே இல்லை. சாதுவாக நின்றார். வாக்கு வாதம் முற்றியது. மாணவர்களை எதற்காக அடித்தீர்கள் என்றார் முதல்வர்? நீ ஹீரோ ஆகிட்டுப் போய்டுவே நாங்க விரல் சூப்பிட்டு போயிடணுமா என்றார் மகாதேவன்.
மீண்டும் வாக்குவாதம் முற்ற முதல்வர் என்றும் பாராமல் சட்டையை கொத்தாகப் பிடித்தார் வெங்கடேசன். முதல்வர் அப்போதும் ஒன்றும் பேசவில்லை கண்கள் கலங்கியது வெளியேறி விட்டார். நாங்கள் ஆடிப்போனோம். அம்மாவின் செல்லப்பிள்ளையாக இருந்தவர். எவ்வளவு கோபம் இருந்தாலும் பன்னீரை அம்மா உட்காரச் சொல்லி விட்டுத்தான் கண்டிப்பார். ஆனால், இந்த கொள்ளை கூட்டம் முதல்வரை சட்டையைப் பிடித்து அடிக்கிறார்கள் என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு எப்படி இருக்கும்..? நல்லவேளை முதல்வர் அந்தக் கொள்ளைக் கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டார். நாங்களும் முதல்வரோடு வந்து விட்டோம். இனி கவலை இல்லை. நாடு நலம் பெறும். சசிகலா கும்பல் விரைவில் கம்பி எண்ணப் போவது உறுதி, என்கிறார் அந்த சட்ட மன்ற உறுப்பினர்.லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக