சென்னை: தற்போது சசிகலா அணியில் உள்ளதாக கூறப்படும் எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர் எங்களுக்கு ஆதரவு தர சம்மதித்துள்ளனர் என முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, முதல்வர் பன்னீர்செல்வத்தின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், ‛எம்.எல்.ஏ.,க்களை சசிகலா தரப்பினர் மிரட்டி, கடத்தி சென்று, அடைத்து வைத்துள்ளனர். எப்படியும் அவர்களை சட்டசபைக்கு அழைத்து வர வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், சசிகலா தரப்பினர் என கூறப்படும் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் எங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள்.
தொடர்பில் பன்னீர்செல்வம்
அண்ணன் பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களாக அந்த எம்.எல்.ஏ.,க்களுடன் தொடர்பில் உள்ளார். உயிருக்கும், உடமைக்கும் பயந்து கொண்டு தான் எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான தங்கள் எண்ணத்தை வெளிப்படையாக கூறாமல் உள்ளனர்.
அவர்களின் உண்மை நிலை சட்டசபையில் வெளிச்சமாகும்,' என்றனர். வாய்ப்பு கிடைக்குமா? முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்று, நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டும். அப்போது தான், சசிகலா அணியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு யாருக்கு என்று தெரியும். பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற முடியுமா என்பது குறித்து கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும். இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற்று, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக