வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

நீதி மன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு... சசிகலா முதல்வராக முடியவே முடியாதாம்?

தமிழகத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் ஆளுநரை சந்தித்தனர். இருவரிடமும் ஆலோசனை நடத்திய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், ஜனாதிபதிக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதனையடுத்து, தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பாரா? இல்லை அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்பாரா? என்ற நிலை தற்போது ஆளுநர் கையில்தான் உள்ளது. மேலும், ம இந்நிலையில், தற்போது வாட்ஸ்அப்பில் பரவிவரும் செய்தியில், சசிகலா இப்போதைக்கு முதல்வராக முடியாதாம். அதனால்தான் ஆளுநர் அவசரமாக டெல்லி சென்று சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்துவிட்டு மும்பை சென்றுவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலருக்கும் தெரியாத ஒன்றான முக்கிய காரணத்தை கூறியுள்ளனர். இது சொத்துக்குவிப்பு காரணம் என்று நினைப்பாங்க. ஆனா அது இல்லை என்பது தெரியாது.
வேறென்ன எனத் தெரிந்துகொள்ள ஆவலா?
‘‘கொடநாடு வழக்கில் இந்திய தண்டனைச் சட்டப்படி நீதிமன்ற சம்மன் சசிகலாவுக்கும் அனுப்பப்பட்டதாம். அந்த சம்மனை உதாசீனப்படுத்தியதால் நீதி மன்றத்தில் கோர்ட் அவமதிப்பு  வழக்கு சசிகலாவின் மேல் நிலுவையில் இப்போவும் உள்ளது.
ஆகையால், இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் சசிகலாவால் முதல்வர் பதவியை தட்டிப்பறிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ஒருவரான சுப்பிரமணி என்பவர் நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிந்து, அதை உடனே எடுத்துக்கொள்ளப்பட்டு சசிகலா முதல்வராவதற்கு தடை போட்டுள்ளதாம்’’ என்று வாட்ஸ்அப் தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
லைவ்டே

கருத்துகள் இல்லை: