நக்கீரன் : டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்களின் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுடெல்லியில் நடந்து வரும் மாணவர்களின் போராட்டம் தற்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும், முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பாதை வகுத்துக் கொடுத்ததுமான தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை: நீட் தேர்வை ஒழிப்பது (Abolition Of NEET) என்பது மட்டுமே. மற்ற அனைத்து கோரிக்கைகளையும் விட, நீட் தேர்வை ஒழிப்பது தான் இந்த போராட்டங்களின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே இந்த அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வை வழங்கும். நீட்தேர்வை தடை செய். மாணவர்களை காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக