சென்னை:
முதல்வர் ஓபிஎஸ் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக திமுக
நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று திமுக செயல் தலைவர்
மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக முதல்வர் ஓபிஎஸ் ஆதரவு கோரினால் அளிக்கப்படும் என்று திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியதாக செய்தி வெளியானது. இதனை உடனடியாக மறுத்தார் அக்கட்சியின் செயல்தலைவரான மு.க. ஸ்டாலின். மேலும், சுப்புலட்சுமி ஜெகதீசனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றும், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் அது குறித்து திமுக ஆலோசனை செய்து முடிவு செய்யும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து அக்கட்சி தலைவர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் அன்பழகனும் முடிவு செய்வார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த பிரச்சனை குறித்து திமுக நிர்வாகிகள் யாரும் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக