தமிழகத்தில் நடந்துவரும் அசாதாரண சூழலில், அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் சொகுசு பங்களாவில் சிறை வைத்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று காலை வட்டாட்சியர் தலைமையில், போலீஸ் அதிகாரிகள் குழு உள்ளே நுழைந்தது. அப்போது, அதிகாரிகள் உள்ளே சென்றவுடன், இவர்களுடன் அழைத்துச்செல்லப்பட்ட மீடியாக்கள் உள்ளே வராமல் அங்கிருந்தவர்கள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.
இதனை, கண்டுகொள்ளாமல் ஆய்வு அதிகாரிகள் உள்ளே சென்றுள்ளனர். ஆய்வு அதிகாரிகளும், போலீசாரும் நினைத்தால் அதை தடுத்திருக்கவும் முடியும், உள்ளே அழைத்துச்சென்றிருக்கவும் முடியும்.
ஆய்வு அதிகாரிகள் இதைச் செய்யாதது ஏன்? இந்த தாக்குதலுக்கு ஆய்வு அதிகாரிகளும் உடந்தையா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, ஆய்வுக்குச் சென்ற வட்டாட்சியர், தற்போது எம்எல்ஏக்கள் சுதந்திரமாக உள்ளதாக தகவல் கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது சொகுசு பங்களாவில்? என்ற பூதகரமான சந்தேகத்தை கிளப்பியுள்ளது. லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக