சனி, 11 பிப்ரவரி, 2017

பொன்னையன் : அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் பன்னீர்செல்வம் ! காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி!


முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான பொன்னையன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் பி.ஆர்.சுந்தரம் மற்றும் அசோக்குமார் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் முதல்வருக்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன்னையன் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். காலத்தில் தமிழக அமைச்சராக இருந்தவர் பொன்னையன். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அதிமுக செய்தித் தொடர்பாளராக பொன்னையனை நியமனம் செய்தார். ஜெயலிலதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை தீவிரமாக ஆதரித்து குரல் கொடுத்து வந்தார் பொன்னையன். முன்னதாக, சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த மதுசூதனன் திடீரென்று ஓ.பி.எஸ்க்கு ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த அவைத்தலைவர் பதவியை செங்கோட்டையனுக்கு வழங்கினர். அதிமுக அவைத்தலைவர் பதவி தமக்கு கிடைக்கும் என காத்திருந்த பொன்னையனுக்கு இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து தனது நிலைபாட்டை மாற்றி முதல்வர் ஓ.பன்னீர்செல்வதிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பொன்னையன் பேசுகையில், அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலாவைத் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் தொண்டர்களின் விருப்பப்படி அமையவேண்டும். கட்சியில் உள்ள ஒன்றரைக் கோடி தொண்டர்கள் கட்சிக்கு யார் பொதுச் செயலாளர் என்று தேர்வு செய்கிறார்களோ அவர்களே பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார்கள். கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தும் திறன் படைத்தவர். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் பன்னீர்செல்வம். வர்தா புயல் ஏற்பட்ட போது அந்த புயலை விட வேகமாக செயல்பட்டவர் பன்னீர்செல்வம். ஊழலற்ற ஆட்சியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திவருகிறார். ஒட்டுமொத்த தமிழகத்தின் செல்லப்பிள்ளை ஓ.பன்னீர்செல்வம்” என்று பொன்னையன் தெரிவித்தார்.
பொன்னையன், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக நாஞ்சில் சம்பத் கூறுகையில், பொன்னையன் விலகியது அதிமுக-விலிருந்து ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ் சென்றுவிட்டதாகவே கருதுகிறேன். என்று கூறினார் மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: