Senthilvel Sivaraj · தமிழ் சினிமாவுல ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடி வசூல்னு இன்னைக்கு நாம ரொம்ப சாதாரணமாகப் பேசுறோமே... ஆனா, அன்னைக்கு வெறும் அஞ்சே ரூபா டிக்கெட் விலைக்கு, தியேட்டர்கள்ல திருவிழா கூட்டத்த கூட்டி, அரசாங்கத்துக்கே ஒரு கோடி ரூபாய் வரி கட்டுன ஒரு மாஸ் வரலாறைத்தான் இதுலே பாக்க போறோம். அதுதான் தமிழ் சினிமாவோட வசூல் வேட்டையை மாத்திப் போட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட 200-ஆவது மெகா காவியமான 'திரிசூலம்' தியேட்டர்கள்ல பண்ணுன அந்த பாக்ஸ் ஆபீஸ் வேட்டைதான்!
வாய் வார்த்தையா இல்லாம, அப்போதைய செய்தித்தாள்கள்ல வெளியான அஞ்சு அசைக்க முடியாத வரலாற்று சான்றுகளை வெச்சு அந்த பிரம்மாண்ட பாக்ஸ் ஆபீஸ் பயணத்த இப்போ நாம பாக்கப்போறோம்.
படம் ரிலீஸான உடனே தியேட்டர்கள்ல கூட்டம் எப்படி அலைமோதியது தெரியுமா, அதைத்தான் நாம முதல்ல பார்க்கப்போற இந்த போட்டோ நமக்குத் தெளிவா காட்டுது. இத்திரைப்படம் வெளியான வெறும் ஆறே வாரங்கள்ல, அதாவது 42 நாட்கள்ல 60 லட்சம் ரூபாய்களை அள்ளிக்குவித்து, தென்னகத் திரைப்பட உலகிலேயே அதுவரை இல்லாத ஒரு புதிய சாதனையை ஏற்படுத்திய மாபெரும் வெற்றிச் சித்திரம்னு இந்த விளம்பரம் அதிகாரப்பூர்வமா அறிவிக்குது.

1979-ஆம் ஆண்டோட மிகக் குறைந்த டிக்கெட் கட்டண அமைப்போடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஆறே வாரங்கள்ல 60 லட்ச ரூபாயைத் தொட்டது ஒரு இமாலய சாதனை. அதுமட்டுமில்லாம, படம் 51-ஆவது நாளைக் கடந்தும் தலைநகரம் சென்னையில சாந்தி அப்புறம் கிரௌன், புவனேஸ்வரி ஆகிய திரையரங்குகள்ல வெற்றிகரமாக ஓடிட்டு இருந்தது. வட தமிழகம் மற்றும் பிற பகுதிகள்ல வேலூர் அப்சரா, பாண்டிச்சேரி ஜெயராமன், காஞ்சீபுரம் லெட்சுமி, சிதம்பரம் வடுகநாதன், விழுப்புரம் சாந்தி, கடலூர் பாடலி , திருவண்ணாமலை ஸ்ரீபாலசுப்பிரமணியா , ஆரணி வித்யா தியேட்டர்கள்லயும், கொங்கு மண்டலத்துல கோயமுத்தூர் கீதாலயா, ஈரோடு ராயல், பொள்ளாச்சி துரைஸ், ஊட்டி ஸ்ரீ கணேஷ், திருப்பூர் டயமண்ட், உடுமலைப்பேட்டை தாஜ் பிக்சர் பேலஸ், அந்தியூர் ஸ்ரீ கேசவன், தர்மபுரி ஸ்ரீ கணேசா தியேட்டர்கள்லயும் படம் சக்கைப்போடு போடுச்சு. அதேபோல மத்திய தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகள்ல சேலம் ஓரியண்டல், திருச்சி பிரபாத், தஞ்சாவூர் அருள், மயிலாடுதுறை பியர்லெஸ், மன்னார்குடி முருகையா, கரூர் அஜந்தா, சின்னசேலம் சோலைஹால் கும்பகோணம் தேவி தியேட்டர்லயும் படம் 51 நாட்களைக் கடந்து ஓடுச்சு.

தென் தமிழகத்துல மதுரை சிந்தாமணி, பழனி வேலாயுதம், இராமநாதபுரம் சந்தோஷ், காரைக்குடி ஸ்ரீராம விலாசம், திருநெல்வேலி சென்ட்ரல், நாகர்கோவில் ராஜேஷ், தூத்துக்குடி காரனேஷன் எனத் தமிழகத்தோட நாலாபுறமும் இருக்குற பி மற்றும் சி சென்டர்கள் வரை படம் அசுர ஓட்டம் ஓடுனதை இந்த விளம்பரம் நிரூபிக்குது.
சரி, ஆரம்பத்துல இப்படி அசத்துன இந்தத் திரிசூலம் படம், அடுத்ததா 75 நாட்களைக் கடந்தப்போ என்ன மாதிரி ரெக்கார்ட் பண்ணுச்சு தெரியுமா, அதைத்தான் இந்த போட்டோ நமக்குக் காட்டுது. படம் 75-வது நாளை எட்டியபோது சென்னை நகரமே அதிரும் வண்ணம் ஒரு புதிய சாதனையை பிரகடனப்படுத்துனாங்க. சென்னையோட முதன்மைத் திரையரங்குகளான சாந்தி , அப்புறம் கிரௌன் மற்றும் புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்கள்ல தொடர்ந்து கொட்டகை நிறைந்த 666 காட்சிகள், அதாவது 666 கண்டினியூயஸ் ஹவுஸ்ஃபுல் ஷோக்கள் அப்படிங்கிற அசாத்திய சாதனையோட படம் 75-வது நாள்ல மாபெரும் வெற்றி நடை போட்டுட்டு இருந்தது.அத்துடன் வேலூர் அப்சரா, பாண்டிச்சேரி ஜெயராமன், காஞ்சிபுரம் லட்சுமி, சிதம்பரம் வடுகநாதன், திருவண்ணாமலை ஸ்ரீ பாலசுப்பிரமணியா, கோவை கீதாலயா, ஈரோடு ராயல், பொள்ளாச்சி துரைஸ், திருப்பூர் டயமண்ட், சேலம் ஓரியண்டல், திருச்சி பிரபாத், தஞ்சாவூர் அருள், மயிலாடுதுறை பியர்லெஸ், மதுரை சிந்தாமணி, திருநெல்வேலி சென்ட்ரல், நாகர்கோவில் ராஜேஷ், கும்பகோணம் தேவி தியேட்டர்லயும் படம் 75 நாட்கள் அசுர ஓட்டம் ஓடி, திரையரங்குகள்ல மக்கள் கூட்டத்துக்கு ஒரு அதிகாரப்பூர்வ சான்றா அமைஞ்சுது.
இப்படி 75 நாளுல மிரட்டுன படம், அப்படியே 100-வது நாளைத் தொட்டப்போ என்னாச்சுங்கற மூணாவது போட்டோவுல இருக்குற விபரங்கள் மூலமா நாம தெரிஞ்சுக்கலாம். 'வெள்ளி விழா சித்திரம்' எனப் போற்றப்படும் திரிசூலத்தோட இந்த 100-வது நாள் விளம்பரம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியாகும். ஏன்னா, இத்திரைப்படம் வெளியான வெறும் 12 வாரங்கள்லயே 1 கோடி ரூபாய் வசூல் செஞ்சு, அப்போதைய தென்னிந்தியத் திரை உலகத்துல அதுவரை எந்த ஒரு படமும் செய்யாத மாபெரும் சாதனையைப் படைச்சுது. சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்கள்ல தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளோட எண்ணிக்கை 900 காட்சிகளா உயர்ந்து புதிய சரித்திரம் படைச்சுது. வேலூர் அப்சரா, பாண்டிச்சேரி ஜெயராம், திருவண்ணாமலை ஸ்ரீபாலசுப்பிரமணியர், கோவை கீதாலயா, கரூா் ராயல், பொள்ளாச்சி துரைஸ், மதுரை சிந்தாமணி, திருச்சி, திருநெல்வேலி சென்ட்ரல், மயிலாடுதுறை பியர்லெஸ் போன்ற தியேட்டர்கள்ல 100 நாட்களைக் கடந்து வெற்றிக் கொடி நாட்டுச்சு.
இப்போ தியேட்டர் விளம்பரங்களை எல்லாம் தாண்டி, படம் ரிலீஸாகி 18-ஆவது வாரத்துல அடியெடுத்து வச்சப்போ வெளியான ஒரு செம இன்ட்ரஸ்டிங்கான செய்தித்தாள் அறிக்கையை உங்களுக்காகக் காட்டுறேன், அதுதான் இந்த நாலாவது போட்டோ. மே 29-ஆம் தேதியிட்ட இந்தச் செய்தி அறிக்கையில, படம் ஜனவரி 27-ல் வெளியாகி 18-ஆவது வாரமா ஓடிட்டு இருந்த போதே தமிழ்நாடு முழுவதும் இத்திரைப்படம் முதற்கட்டமா 1 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியிருந்தது அதிகாரப்பூர்வமா உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.
படம் 1 கோடி வசூலை எட்டிய அந்த இடைப்பட்ட காலத்துலயயே, தமிழக அரசுக்கு கேளிக்கை வரியா, அதாவது என்டர்டெயின்மென்ட் டாக்ஸா மட்டுமே 50 லட்சம் ரூபாயை வாரி வழங்கி இருந்தது. இந்தச் செய்தியோட இறுதிப் பகுதியில ஒரு தீர்க்கதரிசனக் கணிப்பையும் வெளியிட்டு இருந்தாங்க, அதாவது "இப்படம் வெள்ளிவிழாவை முடிக்கும் போது, இதோட ஒட்டுமொத்த வசூல் 2 கோடி ரூபாயைத் தாண்டும்" அப்படின்னு குறிப்பிட்டு இருந்தாங்க.
அப்போ கணிக்கப்பட்ட அந்தப் பிரம்மாண்ட வசூல், படம் 175 நாட்களைக் கடந்து வெள்ளிவிழா கொண்டாடுனப்போ எப்படி நிஜமாச்சுன்னு இந்த ஐந்தாவது போட்டோவோட செய்தி நமக்கு அப்பட்டமா நிரூபிக்குது.
படம் 175 நாட்களைக் கடந்து வெள்ளிவிழா கண்டபோது வெளியான செய்தி இது. முந்தைய செய்தியில கணிக்கப்பட்டபடியே, திரிசூலம் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 2 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி, தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முதலாக 2 கோடி ரூபாய் வசூல் செஞ்ச மகா சரித்திர சாதனையைப் படைச்சுது. அதைவிட ஒரு பிரம்மாண்டமான விஷயம் என்னன்னா, இத்திரைப்படம் அள்ளுன மொத்த வசூலான 2 கோடி ரூபாய்ல, சரியாக 1 கோடி ரூபாயைத் தமிழக அரசுக்கு பொழுதுபோக்கு வரியாக மட்டுமே கட்டுனுச்சு. ஒரு திரைப்படத்தோட மூலமா அரசாங்கத்துக்கு இவ்வளவு பெரிய வருவாய் கிடைச்சதும், வசூல் பண்ணுன தொகையில பாதியை வரியாகவே செலுத்துனதும் இந்தியத் திரை வரலாற்றிலேயே முதன்முதலான, இன்றுவரை முறியடிக்க முடியாத ஒரு தனித்துவமான சாதனையாகும். மேலும், தமிழ்நாட்டுப் பட உலகிலேயே எந்தப் படமும் செய்யாத சாதனையா, தமிழ்நாட்டுல 9 திரையரங்குகள்ல ஒரே சமயத்துல 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்டுச்சு. அந்த வெள்ளி விழா தியேட்டர்கள் என்னன்னா, சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி, கோவை கீதாலயா, வேலூர் அப்சரா, மதுரை சிந்தாமணி, திருச்சி பிரபாத், சேலம் ஓரியண்டல், ஆகும்.
இந்த மாபெரும் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அந்த மாதத்தோட 20-ஆம் தேதியுடன் வெள்ளிவிழா நிறைவு பெற்று, 25-ஆம் தேதி சென்னையில மாபெரும் வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் நடந்துச்சு. சிவாஜி புரொடக்ஷன்ஸோட அடுத்த படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்குப் போயிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி விழா பரிசளிப்பு நிகழ்ச்சியில கலந்துகொள்வதற்காக, அந்த மாதத்தோட 3-வது வாரத்துல சென்னை திரும்புறார் அப்படிங்கிற சுவாரசியமான செய்தியோடு இந்த அறிக்கை முடியுது.
6 வாரத்துல 60 லட்சம், 12 வாரத்துல 1 கோடி, கடைசியில 9 தியேட்டர்கள்ல ஒரே நேரத்துல வெள்ளிவிழா கண்டு, தமிழ் சினிமாவோட முதல் 2 கோடி ரூபாய் வசூல் காவியமா, அரசாங்கத்துக்கே 1 கோடி ரூபாய் வரி கட்டுன ஒரே படமாக 'திரிசூலம்' இன்னைக்கும் கெத்தா நிக்குது. விளம்பரங்களால கட்டமைக்கப்பட்ட போலி வசூல்களுக்கு மத்தியில, தியேட்டர் தியேட்டரா, பிராந்தியம் பிராந்தியமாத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்ட அசல் பாக்ஸ் ஆபீஸ் புரட்சி தான் நம்ம நடிகர் திலகத்தோட 'திரிசூலம்.
செந்தில்வேல் சிவராஜ்
9087620800
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக