அ.தி.மு.க.,எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று ஆலோசனை நடத்திவரும் அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் சசிகலா அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து கொண்டு, ராஜ்பவன் சென்று கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவலையடுத்து ராஜ்பவனில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தபட்டுள்ளது.
கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏக்கள் அனைவருடைய ஆதரவு என்னிடமுள்ளது என்னை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வையுங்கள் என சசிகலா கோரி இரண்டு நாட்கள் ஆகியும் கவர்னர் மாளிகையில் இருந்து அழைப்பு வரவில்லை. இதில் அதிருப்தி அடைந்த சசிகலா இன்று இந்த அதிரடி முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பதவியேற்பு நாள் தள்ளி போக போக தன்னிடமுள்ள எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக முதல்வர் பன்னீர் செல்வத்திடம் சென்று வருவதால் அடுத்து இரண்டு நாட்கள் சென்றால் கூடாரம் காலியாகிவிடும் என்ற அச்சம் சசிகலாவிற்கு ஏற்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையில் எம்.எல்.ஏக்கள் மெஜாரட்டியை காண்பிக்க அதிகாரம் இல்லை என்பதால் அதை தடுப்பதற்காகவே அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக