ஒ.பி.எஸ்.ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த 2 நாடாளுமன்ற எம்பிக்கள்
முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் ஆகிய இரண்டு பேரும் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் ராஜமாணிக்கம், ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், மனோகரன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துச்செல்வி, முத்துகிருஷ்ணன், அய்யப்பன், வி.என்.பி.வெங்கட்ராமன், தாராவில்சன், சுப்புராயர், முன்னாள் எம்.பி.க்கள் இளங்கோவன், ராஜா பரமசிவன் உள்ளிட்டோர் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக