சென்னை: அ.தி.மு.க.வின் வங்கி கணக்குகளை முடக்க கோரி வங்கிகளுக்கு பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அ.தி.மு.க.,கட்சியின் பொருளாளராக இருந்து வருபவர் முதல்வர் பன்னீர் செல்வம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பன்னீர் செல்வத்திடமிருந்த பொருளாளர் பதவியை பறித்து திண்டுக்கல் சீனிவாசனிடம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் பன்னீர் செல்வம் அ.தி.மு.க.,வின் வங்கி கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தற்போது தானே கட்சியின் பொருளாளர் எனவும் தனது ஓப்புதல் இன்றி அதிமுக வங்கி கணக்குகளை யாரும் இயக்க அனுமதிக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக