புதன், 8 பிப்ரவரி, 2017

சசிகலாவிடம் கங்கை அமரன்: மிரட்டி வாங்கிய என் பண்ணை வீட்டை திருப்பி தா

Stating that both Pannelselvam and Jayalalithaa were innocent, he said that it was now time for ‘victims’ like him to fight back. “I don’t care, come and cut my neck and go. People like me who have been affected have to fight,” he said. He added that Sasikala and her family ruled with fear.
பழைய மகாபலிபுரம் சாலையில் பையனூர் பக்கம் 22 ஏக்கர் நிலப்பரப்பில் இசையமைப்பாளா் கங்கை அமரனுக்கு ஒரு பண்ணை வீடு உண்டு. பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டை, அந்தவழி சென்று வந்த சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனின் கண்ணில் பட, அவ்வளவு தான். அவரிடம் அதை வாங்க, முதல்வர் ஜெயலலிதா சந்திக்க விரும்புகிறார் என்று சொல்ல, அவரும் பொக்கெயுடன் போயஸ் தோட்டம் வந்து இருக்கிறார். முதலவர் வர, அவரிடம் பொக்கே கொடுக்க, வாங்கிக்கொண்டு முதல்வா் எதுவும் பேசாமல் சென்று விட்டாராம். கொஞ்ச நாட்களில், பாஸ்கரன் கங்கையமரனின் வீட்டிற்கு வந்து, வீட்டை விற்க சொல்லி கேட்க, அவர் முடியாது என்று சொல்லி இருக்கிறார். அதன் பின், முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், பாஸ்கரன் ஆகியோர் பதிவாளர் மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் வந்து மிரட்டி, தன் பேரில் அந்த வீட்டை பதிந்து கொண்டனராம். இதுகுறித்து ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பேசியவர், இப்போது நிகழ்ந்து வரும் அரசியல் சூழ்நிலையில்,தைரியமாக இன்று, என் வீட்டை திருப்பி தா. நேற்று சசிகலாவிடம் கங்கை அமரன் திருப்பூரில் பத்திரிகை மீட்டில் கேட்டுள்ளார்.
லைவ்டே


திருப்பூர்: பொதுமக்களின் மனங்களில் ஓடிய பிம்பங்களை தான் பன்னீர்செல்வம் பிரதிபலித்திருப்பதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். சசிகலா தரப்பை எதிர்த்த ஓபிஎஸின் முடிவு துணிச்சலானது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இசையமைப்பாளர் கங்கை அமரன் திருப்பூர் சென்றிருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. "சசிகலாவை எவரும் எதிர்க்க முன்வராத போது பன்னீர்செல்வத்தின் முடிவு துணிச்சலானது. பொதுமக்களின் மனங்களில் ஓடிய பிம்பங்களை தான் பன்னீர்செல்வம் பிரதிபலித்திருக்கிறார். தங்களுக்கு சொந்தமான பையனூர் பங்களாவை மிரட்டி வாங்கியது போல் ஏராளமான பணக்காரர்களின் சொத்துக்களையும் மிரட்டி வாங்கினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொண்டர்களை சந்திக்காமலேயே கட்சி பொறுப்பையும், ஆட்சியையும் கைப்பற்ற முயலுவது எந்த விதத்தில் நியாயம்? பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள சசிகலா உண்மையிலேயே ஆளுவதற்கு தான் வருகிறாரா என்பது தெரியவில்லை". இவ்வாறு கங்கை அமரன் செய்தியாளர்களிடம் பேசினா tamiloneindia;

கருத்துகள் இல்லை: