சனி, 11 பிப்ரவரி, 2017

தமிழர்கள்... இப்போது 18 - 40 வயது .. ஐ.டி, மாணவ, மத்திய தர மொண்ணையான மடையர்கள்

அரசியல் மொண்ணைகள்....
இப்போது கேட்கும் ஓலம் அரசியல் தெரியாத பாமரர்களுடையது (படிக்காத என அர்த்தம் இல்லை... ஐ.டி, மாணவ, மத்திய தர மடையர்களுக்குத்தான் அரசியல் தெரியாது). ஆனால், பிம்பம் இல்லை என்ற இவர்களுடைய மொண்ணைத்தனமான குறை முக்கியமானது. மன்மோகனை தரையில் தள்ளி மோடியை மேலே ஏற்றிய கத்தி அது.
தமிழர்கள், குறிப்பாக இந்த தலைமுறைக்காரர்கள், அதாவது இப்போது 18 - 40 வயதிருக்கும் ஆட்கள் மொண்ணையான அறிவுடையவர்கள் என மாதமொரு முறை நிரூபித்து, என் நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள். முதலில் மெரினாவில் நடந்த டெல்லி அப்பள போராட்டம், ஆர்.ஜே.பா, லாரண்ஸ் கூத்து, புட் சட்னி இசுமைல் சேட்டை புரட்சி. இப்போது ஓ.பி.எஸ்.
இவர்கள் மிக சீரியஸ் ஆக மூஞ்சை வைத்துக்கொண்டு கம்யூக்களை கிண்டலடிப்பதை, திமுக துரோகம், குடும்பம் ஊழல் என பேசுவதை, திருமாவை கிண்டலடிப்பதை பார்த்தால் குமட்டிக்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கம்யூ கட்சியின் கொள்கைகள், தலைவர்களின் கருத்துகள், வரலாறு அல்லது உங்கள் சொந்த தொகுதியில் அதன் லோக்கல் ஆட்கள், போராட்டங்கள் தெரியுமா? சரி. கலைஞர் என்னென்ன செய்தார்? என்னென்ன சட்டங்கள், கட்டமைப்பு வசதிகள், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தெரியுமா? சரி, குற்றம் சாட்டவாவது 2ஜி தவிர, 1 நாள் உண்ணாவிரதம் தவிர வேறு காரணம் தெரியுமா? ஸ்டாலின் மேயராக இருந்ததாவது ? திருமா பற்றியோ அல்லது அவரது கொள்கை ரிதியிலான பேட்டிகளை வாசித்து இருக்கிறீர்களா?

இப்போது ஓ.பி.எஸ் கூத்து... மிக்சர் தின்னவன் என்று சொல்லிவிட்டு. சேகர் ரெட்டி யார்? பிஆர்பி யார்? சரி வரலாற விடு, மெரினால செருப்படி விழுந்தப்ப யார் முதல்வர்? மதுசூதனன் வரலாறு தெரியுமா?
சந்திரலேகா?
ஓ.பி.எஸ் ஏன் 2 மாசமா ஜெ., சாவு மர்மத்தை பத்தி பேசல?
விசாரணை கமிஷன் இப்போ ஏன்?
முதல்வர் பதவில நீயே இருந்துக்க சொல்லீருந்தா?
இருக்கட்டும், இப்ப 120 பேர் ஓபிஎஸ்க்கு ஆதரவு குடுத்தா அவர் நல்லவரா? இத்தினி நாள் சசிக்கு குடுத்தான் காசுக்காக? சி.வி சண்முகம் புனிதர் ஆயிடுவாரா? உங்களுக்கெல்லாம் கேள்வி கேட்கவே தோணாதா?
சரி பேசலாம், வரலாற விட்டுடுவோம். இப்போதைக்கு தமிழ்நாடு சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன. ஒரு Matrix roadmap போடுவோம்.
ஓ.பி.எஸ், ஸ்டாலின் இருவரும் என்னென்ன செய்வார்கள். ஏன் அது சரி சொல்லுங்க பாக்கலாம்.
WhatsApp படிச்சுட்டு, மீம்ஸ் மட்டும் அரைகுறையா மேஞ்சுட்டு வந்து அரசியல் கருத்து கூந்தலெல்லாம் பேசாதீங்கடா....
By Shan Shylesh

கருத்துகள் இல்லை: