சசிகலாவை சட்டரீதியாக கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என்பதற்காகவே தயார் செய்து மனுக் கொடுத்துள்ளார் முதல்வர் பன்னீா்.
அதில் அப்படி என்னதான் இருந்தது. 2 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று கருதி காத்து இருந்த சசி உறவினர்கள் அதிச்சியில் அடங்கிவிட்டனா்.
என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்துவிட்டனர். அந்த ராஜினாமாவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும்., முதல்வராக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது.
கவர்னர் மாளிகையில் எம்.எல்.ஏ.,க்கள் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது. சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பன்னீர் செல்வம் மனுக் கொடுத்ததோடு தனது ஆதரவு எம்எல்ஏக்கள், மற்ற எம்எல்ஏக்களை எப்படி கையெழுத்து இட சசிகலா வைத்தார் என்பது குறித்தும் மனு கொடுத்துள்ளார்.
எனக்குத்தான் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்து உள்ளனர். அதற்காக கையெழுத்தும் போட்டு உள்ளார். முதல்வராக பதவி ஏற்க எனக்கு அழைப்பு விடுக்க வேண்டும். சட்டசபையில் எனக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. நிரூபிக்க சொன்னால் அதை நான் நிரூபித்து காட்டுவேன். எனவே அதற்கான முதல் வாய்ப்பை எனக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் இருவா் கொடுத்த மனுவிலும் முதல்வர் பன்னீர் செல்வம் கொடுத்த மனு சசிகலாவின் முதல்வர் கனவுக்கு வேட்டு வைப்பதாக இருக்கிறது. இதன்படியே சட்டம் செல்லும் என்றும் கூறப்படுகிறது. லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக