சென்னை: மும்பையில் உள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று
பிற்பகல் சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை வரும் ஆளுநர்
வித்யாசகர் ராவை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தமது ஆதரவு
எம்.எல்.ஏ.க்களுடன் சென்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.
அதேபோல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தமது ராஜினாமா கடித விவகாராம்
குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேச உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்க ஆயத்தமாகி வருகிறார். பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், திடீரென உதகையிலிருந்து டெல்லி கிளம்பி சென்றார். தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லியிலிருந்து அப்படியே, மும்பை சென்றுவிட்டார். இதனால் மன்னார்குடி கோஷ்டி அதிர்ச்சியடைந்தது. இதனிடையே நேற்று இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மவுன புரட்சி செய்தார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலையே புரட்டி போட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறித்தார் சசிகலா.
இதனால் தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு சென்னை புறப்படுவதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் குழப்பம் நிலவுவதால் ஆளுநர் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
;ஓபிஎஸ், சசி, அதிமுக எம்.எல்..ஏக்களுடன் சந்திப்பு
சென்னை வரும் ஆளுநர் வித்யாசகர் ராவை இன்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா 3 பேருந்துகளில் சிறைபிடிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுடன் சென்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். அதேநேரத்தில் ஆளுநர் வித்யாசகர் ராவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து தமது ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேச உள்ளார். இச்சந்திப்புகளைத் தொடர்ந்து ஆளுநர் எடுக்கப் போகும் முடிவுக்காக தமிழகம் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக