ராதா மனோகர் 83 ஜூலை கலவரம் பற்றிய சோக நினைவுகளை இப்போதும் மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தி கொள்வதில்லை ஒரு ஆசுவாசம் அடைந்தால் இது ஒரு நோயின் அறிகுறிதான்
இதை ஒரு விக்டிம் சின்றோம் என்றும் கூறலாம்
நான் ஒரு விக்டிம் எனக்கு ஒரு அநியாயம் நடந்திருக்கிறது.
அல்லது நாம் தமிழர்கள் எமக்கு எப்போதும் அநியாயம் செய்கிறார்கள்
என்பது போன்ற எண்ணங்கள் உங்களை அறியாமலேயே உங்களை தாலாட்டுவது ஆரோக்கியமானது அல்ல
அந்த சம்பவங்களை நீங்கள் விரும்பாவிடினும்
அதை பற்றி மீண்டும் மீண்டும் உருப்போட்டு கொள்வதில் ஆர்வம் இருந்தால்
மறைமுகமாக அல்லது உங்கள் உள்ளுணர்வில் அதை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றுதான் பொருள்
எதை நீங்கள் ஆழமாக ரசிக்கிறீர்களோ அது மீண்டும் மீண்டும் உங்களை நோக்கி வரும்!
இதுதான் இலங்கை தமிழர்களுக்கு நடந்து கொண்டிருப்பது
தன்னால் வாரா பிழையும் உண்டோ தக்கோனே?
இறுதியாக சிங்களவர்கள் உங்களுக்கு செய்ததாக்க கூறப்படும் அநியாயங்களை விட பலமடங்கு அந்நியாயங்களை நீங்களே உங்கள் சகோதர்களுக்கு செய்தீர்களே?
சகோதர போராளிகளை ஏராளமான தமிழ் தலைவர்களை கல்விமான்களை காரணமே இல்லாமல் குரூரமாக கொன்று குவித்தீர்களே
இஸ்லாமியர்களை ஒரே நாளில் ஊரை விட்டு துரத்தினீர்களே?
அதுவும் அவர்களின் அத்தனை சொத்துக்களையும் பறித்து விட்டு வெறும் கையேடு துரத்தினீர்களே?
இத்தனை அக்கிரமங்களையும் செய்து விட்டு நீங்கள் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் என்று விக்டிம் டிராமா அரங்கேற்றம் செய்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக