தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது’ என மத்திய உள்துறை அமைச்சருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பினார்.
இதுதொடர்பான, தமிழக அரசியல் நிலவரம் குறித்து கவர்னர்,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 3 பக்க அறிக்கையை அனுப்பி உள்ளார்.கவர்னரின் அறிக்கையில் கூறி உள்ளதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அதிமுகவில் நிலவும் பிரச்சனை உட்கட்சி பிரச்னைதான். சொத்து குவிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட் சில தினங்களுக்குள் தீர்ப்பு வழங்க உள்ள சூழலில், சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது.
அதிமுக, எம்.எல்.ஏ.,க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனரா, அவர்களில் சூழல் என்ன என்ற விசாரணை நடத்துமாறு தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் சசி உன்வேலை என்கிட்ட ஆகாது என திட்டவட்டமாக கவர்னா் வித்யாசாகர ராவ் தெரிவித்துவிட்டதாக கவர்னா் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் உள்துறைக்கு அனுப்பிய அறிக்கை குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதால், அவ்வாறு அறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை என்று கவர்னர் மாளிகை மறுத்துள்ளதாக தெரியவருகிறது. லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக