அதிமுக
பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு நேற்று வரை தனது ஆதரவை தெரிவித்த மாஃபா
பாண்டியராஜன் இன்று திடீரென பன்னீருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தேமுதிக-வில் இருந்த மாஃபா பாண்டியராஜன், விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுக-வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் பதவியையும் வழங்கினர். இந்நிலையில், சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் நிலவிவரும் மோதலில், சசிகலாவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் மாஃபா பாண்டியராஜன். சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாக்களித்த மக்களின் குரலுக்கு மதிப்புக் கொடுத்து செயல்படுவேன். ஜெயலலிதாவின் புகழுக்கும் அதிமுக-வின் ஒற்றுமைக்கும் பங்கம் வராதவகையில் நான் எனது முடிவை எடுப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
மாஃபா பாண்டியராஜன் தனது அரசியல் வாழ்க்கையை பாஜக-வில் இருந்தே தொடங்கியவர். பின்னர் தேமுதிக-வுக்கும் அதிமுக-வுக்கும் கட்சி மாறினார் இந்நிலையில், தற்போது அதிமுக-வில் ஏற்பட்டுள்ள விரிசலில் ஆதரவை யாருக்கு அளிக்கலாம் என்ற குழப்பத்தில் இருந்த பாண்டியராஜன், பன்னீருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பாஜக-வில் இருந்து பாண்டியராஜனுக்கு வந்த அழுத்தம் காரணமாகவே தனது நிலைபாட்டை மாற்றியுள்ளார் என்று கருதப்படுகிறது.minnambalam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக