தலித் எம்.எல்.ஏ.க்களை விடுவிக்க வேண்டும்: அருந்ததியர் இளைஞர் பேரவைத் தலைவர் கோரிக்கை
தலித் எம்.எல்.ஏ.க்களை விடுவிக்க வேண்டும் என அருந்ததியர் இளைஞர் பேரவைத் தலைவர் வடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவில் 30க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தின் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தற்போது நிலவி வரும் அதிமுக உட்கட்சி பிரச்சனையில் சசிகலா தலைமையை ஏற்க விரும்பவில்லை. குறிப்பாக மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அருந்ததிய சமூக எம்எல்ஏக்களான அவர்கள் சுயமாக பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்தநிலையில் அவர்களையும் அதிமுக தலைமை கடத்தி சென்றுவிட்டது. ஆனால் எங்களின் அருந்ததிய சமூக எம்எல்ஏக்கள் சசிகலா தலைமையை ஏற்கவில்லை. இருந்தாலும் அவர்களை கட்டாயப்படுத்தி கடத்தி சென்றுள்ளது சசிகலாவின் குழு. இப்போது எங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவர்களை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமானது. ஆகவே அவர்களை விடுவிக்க வேண்டும்.
அவர்களுடைய சுதந்திரமான கருத்துக்களுக்கு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும். அருந்ததிய சமூக எம்எல்ஏக்கள் சசிகலா ஏற்கவில்லை என்பதுமட்டும் எங்களுக்கு தெரிகிறது. எனவே ஒரு சமூக மக்களின் பிரதிநிதியாக உள்ள அவர்களை கட்டாயப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவர்களை விடுவித்து சுயமாக அவர்கள் கூறும் கருத்துக்களை கேட்டறிந்து இந்த ஆட்சி அதிகாரத்தை கொண்டு செல்வதற்கு நியாயமான நேர்மையான காரணத்தை வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று வடிவேல் கூறியுள்ளார். ஜீவா தங்கவேல் நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக