ராதா மனோகர் : பல கர்நாடக சங்கீத விற்பன்னர்கள் உள்ளூர ஹிந்துஸ்தானி இசையை அதிகமாக விரும்புவார்கள்
ஒரு ரகசிய ரசனை போல ஹிந்துஸ்தானி ராகங்களையும் கஸல் போன்ற ஹிந்துஸ்தானி இசை வடிவங்களையும் உள்ளூர ரசிப்பார்கள்
ஆனாலும் பாடல் உருப்படிகள் கர்நாடாக இசையில்தான் அதிகமாக உள்ள காரணத்தால் கர்நாடக இசைக்கலைஞர்களாக தொடர்கிறார்கள்
தமிழ் நாதஸ்வர வித்வான்களிடம் அழகியலோடு வளர்ந்த இசையை சைவ வைணவ வழிபாட்டு கோஷ்டி கைப்பற்றி அந்த இசையையே ஒரு கர்நாடக வழிபாட்டு மந்திரமாக மடைமாற்றி விட்டார்கள்.
இதன் காரணமாக நாதஸ்வர இசையில் இருந்த காதல் காமம் அன்பு போன்ற மென்மையான ரசனை பெரிதும் குறைந்து விட்டது
நாதஸ்வர இசையை கர்நாடக இசை என்று மடைமாற்றும் போதே அதன் இனிமை மறைந்து அது ஒரு வழிபாட்டு பக்தி அல்லது ஒப்பாரிக்கு நிகரான இசையாக மாறிவிட்டது
அளவுக்கு அதிகமான பக்தி செறிவூட்டல் காரணமாக அதில் ஒப்பாரி ஓலம் அழுகை போன்ற பாவங்களே தூக்கலாக வளர்ந்தது
இந்த நிலையில் கர்நாடக இசை என்று இருந்த இசை வடிவத்தில் கொஞ்சம் மென்மையை கலந்தவர்கள் திரை இசையமைப்பாளர்கள்தான்
அதிலும் குறிப்பாக இந்த விடயத்தில் இளையராஜா கொஞ்சம் அதிகமாகவே பங்களிப்பு செய்துள்ளார்
இந்த பக்தி ஒப்பாரி கோஷ்டியிடம் ஹிந்துஸ்தானி இசை சிக்கவில்லை
வடஇந்தியாவில் சைவ வைணவ கோஷ்டிகள் கிடையாது
அதனால் சாதாரண மக்களின் வாழ்வியலில் இருந்து உருவான இந்துஸ்தானி இசை மனதை இதமாக வருடும் மேன்மையை இழக்கவில்லை
குறிப்பாக காதல் காமம் அழகை ரசிக்கும் பாவம் போன்ற நுண்ணுணர்வு ஹிந்துஸ்தானி இசையில் தூக்கலாக இருக்கிறது
இப்படித்தான் மக்களின் ரசனைக்கு உரியதாக இருந்த சதுர்க்கச்சேரி ஒரு கடவுள் வழிபாட்டு ஐட்டமாக ருக்குமணி கும்பலால் மாற்றப்பட்டு விட்டது.
இந்த நாட்டிய கலையை கூட மக்களின் ரசனைக்கு உரிய கலையாக மீட்டு எடுத்த பெருமை திரை நடன கலைஞர்களையே சாரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக