திங்கள், 20 ஜூலை, 2026

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல்!

 minnambalam.com - Kavi ;  விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டார். 
பின்னர் எஸ்.பி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது போலீசார் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக மார்கண்டேயன் குற்றம்சாட்டியிருந்தார். 
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 


அப்போது போலீசார் சார்பில் மார்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. 
இதை ஏற்க மறுத்த நீதிபதி சுமதி, 15 நாட்கள் அதாவது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: