அப்பல்லோ
மருத்துவமனையில் ஜெ. மரணம் அடைந்து 60 நாட்கள் கழித்து அவருக்கு சிகிச்சை
அளித்த மருத்துவர்கள் பிப்ரவரி 6-ம் தேதி திடீரென பத்திரிகையாளர்களை
சந்தித்து அவரது மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தார்கள்.;லண்டன்
டாக்டர் ரிச்சர்ட் பீலேவும், அப்பல்லோவின் டாக்டரும் ஜெ.விடமிருந்து
இடைத்தேர்தல் விண்ணப்ப படிவத்தில் கைநாட்டு வாங்கியதால் புகழ்பெற்ற அரசு
டாக்டருமான பாலாஜியும், ஜெ. மரணத்திற்கு பிறகு உடலை பதப்படுத்தும் வேலையை
செய்த டாக்டர் சுதா சேஷையனும், ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்
குழுவுக்கு தலைமை தாங்கிய டாக்டர் பாபு ஆப்ரஹாமும் பத்திரிகையாளர்களை
சந்தித்து, ஜெ.வுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை
குறித்த விளக்கத்தை அளித்தனர்.
ஜெ.வின் முகத்தில் இருந்த மூன்று ஓட் டைகள் பற்றிய கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த டாக்டர் சுதா சேஷையன், "நான் அந்த மூன்று ஓட்டைகளை பார்க்கவில்லை' என்றார். உலகம் முழுவதும் உள்ள மீடியாக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான அந்த ஓட்டை பற்றிய தகவல்களை, ஜெ.வின் உடலை பதப்படுத்தும் (எம்பார்மிங்) வேலையை செய்த டாக்டர் மறுத்து, பத்திரிகையாளர் சந்திப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஜெ.வின் மரணத் தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. அந்த சந்தேகங்கள் தெளிவுபடுத்தப் படவில்லையென்றால் மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடுவேன் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கூறுகிறாரே' என்கிற கேள்விக்கு "அது ஒரு முட்டாள்தனமான செயல்' என லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பதிலளித்தபோது... செய்தியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். "ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டு மெதுவாக அவரைக் கொன்றனர் என குற்றம் சாட்டப்படுகிறதே' என வந்த கேள்விக்கு, "நான் அவருக்கு சிகிச்சை அளித்தவன். அவருக்கு "செப்சிஸ்' என்ற நோய் தாக்கியிருந்தது' என முதன்முறையாக ஜெ.வுக்கு "செப்சிஸ்' எனப்படும் உயிர்க்கொல்லி நோய் இருந்ததை ஒத்துக் கொண்டார் டாக்டர் பீலே.
"இடைத்தேர்தல் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் வழங்கும் படிவங்களில் ஜெ. கைநாட்டு வைக்கும் போது சுயநினைவுடன் இருந்தார்' என சொன்ன டாக்டர் பாலாஜி, "அவரது கைகளில் வீக்கம் இருந்ததால்தான் கைநாட்டு வைத்தார்' என்றார். அவரிடம், "ஜெ., வலது பக்கம் பாதிக்கும் பக்கவாத நோயான ஹெமிபிளீஜியாவால் பாதிக்கப்பட்டார்... அதனால்தானே அவர் கைநாட்டு வைத்தார்' என செய்தியாளர்கள் கேட்டபோது... அவர் அதிர்ச்சிக்குள்ளாகி அதை வேக வேகமாக மறுத்தார். அத்துடன் "அப்பல்லோ மருத்துவ மனையில் உயர் சிகிச்சைப் பிரிவில் 75 நாட்கள் ஜெ. சிகிச்சை பெற்றதற்கு 5.5 கோடி ரூபாய்தான் பில் ஆனது. குடும்பத்தினர் செலுத்திவிட்டார்கள்' என்றார். "உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைக்கு ஐந்தரை கோடி ரூபாய்தான் பில் வந்ததா?' என செய்தியாளர்கள் கேட்டதற்கு... பதில் சொல்லாமல் தவிர்த்தார் டாக்டர் பாலாஜி.
t;அதற்குமேல் செய்தியாளர்கள் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை என்பதால், அவரை காப்பாற்றும்விதமாக டாக்டர் ரிச்சர்ட் பீலே செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முன்வந்தார்.
;அவரிடம் "ஜெ. இறந்து 60 நாட்கள் கழித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி நீங்கள், ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி பேச என்ன காரணம்?' என கேட்டபோது...
"இதற்கு முன்பு என்னை அரசு அழைத்து ஜெ.வின் சிகிச்சையின் போது என்ன நடந்தது என மீடியாக்களிடம் சொல் லுங்கள் என சொல்லியிருந்தால் நான் நிச்சயமாக சொல்ல வந்திருப்பேன். என்னை இப்போதுதான் அழைத்து பத்திரிகை யாளர்களிடம் பேசச் சொன்னார்கள். அதனால் இப்போது பேசுகிறேன்' என்றார்.
;"இந்த பத்திரிகை யாளர் சந்திப்புக்கும் சசிகலா முதல்வர் ஆவதற்கும் ஏதா வது தொடர்பு இருக்கிறதா?' என கேட்டதற்கு... "அது எனக்குத் தெரியாது' என்ற அவர்...;"ஜெ.வுக்கு மருத்துவ சிகிச்சைகளால் கட்டுப் படுத்த முடியாத அளவிற்கு சர்க்கரை நோய் இருந்தது. அத்துடன் அவருக்கு மிக அதிகமான ரத்த அழுத்தம் இருந்தது. இந்த இரண்டும்தான் அவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று அதிகரிக்கக் காரணம்' என்றார்.
இந்த தகவல்களை ஏன் அப்பல்லோ மருத் துவமனை முன்கூட்டியே ஜெ. சிகிச்சை பெறும் காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளில் சொல்ல வில்லை. அப்பல்லோ மருத்துவமனை உரிமையாளர் பிரதாப் சி.ரெட்டி ஏன் இந்த பத்திரிகையாளர் சந்திப் பில் கலந்து கொள்ளவில்லை ஆகிய கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவில்லை, தவிர்த்தார்.
அப்பல்லோவின் உரிமையாளர் பிரதாப் சி.ரெட்டியின் மகள் ப்ரீத்தா ரெட்டி போயஸ் கார்டனில் சசிகலாவுடன் நடத்திய ஆலோசனைப் படிதான் டாக்டர் ரிச்சர்ட் பீலே சென்னை வந்தார். 6-ம் தேதி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் என்ன பேச வேண்டும் என பீலேவுக்கு 5-ம் தேதி போயஸ் கார்டனில் வகுப்புகள் நடத்தப்பட்டன என்கிற தொனியில் வந்த கேள்வி களையும் ரிச்சர்ட் பீலே தவிர்த்தார்
அப்பல்லோ டாக்டர் பாபு ஆப்ரஹாமும், பீலேயும் எந்த ஒரு இடத்திலும் ஜெ.வின் ரத்த உறவினரான தீபக்கை சந்தித்ததாக சொல்ல வில்லை. ஜெ.வின் குடும்பம் என திரும்பத் திரும்பச் சொன்னார். ஜெ. உயிரிழக்கும் அள விற்கான செப்சிஸ் நோய் ஜெ.வை எப்படி தாக்கியது என்பதையும் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெ.வை கொண்டு வருவதற்கு முன்பு அவரது உடல்நிலை எப்படி இருந்தது, எதனால் ஜெ. நோய்வாய்ப்பட்டார் என்பதையும் விளக்க வில்லை.
இறுதியாக, ஜெ.வுக்கு எந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை. அவருக்கு கால்கள் அகற்றப் படவில்லை என போகிற போக்கில் பதில் சொன்னார் டாக்டர் பீலே."சிகிச்சைக்கே கோடிக்கணக்கில் பில் வாங்கும் பீலே, அவர்அளித்த சிகிச்சை பற்றி பேசவும் கோடிக்கணக்கில் பணம் பெற்று பேட்டி கொடுத்தாரே தவிர அவரது பேட்டி, ஜெ. மரணம் பற்றிய சந்தேகங்களை தீர்க்கவில்லை. மாறாக, மக்களிடம் அது கூடுதல் சந்தேகங்களை ஏற்படுத்திவிட்டது'' என்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.-தாமோதரன் பிரகாஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக