மின்னம்பலம் - Mathi : , “நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா கூட்டணி எல்லாம் முடிவாயிடுச்சு போல?
அதைத்தான்யா சொல்ல வர்றேன்.. மோடி 23-ந் தேதி மதுராந்தகத்துல பேசுற மீட்டிங்குல எப்படியாவது ‘கூட்டணி கட்சிகளை’ மேடை ஏற்றனும்னு ரொம்பவே தீவிரமா இருக்காங்க..
பியூஷ் கோயலும் 21-ந் தேதி சென்னை வந்து கூட்டணி பேச்சுகளை பைனல் செய்ய போறாருய்யா..
அதிமுக- பாஜக கூட்டணியில புதுசா எந்த கட்சிகள் இணையுதாம்?
இதை பத்தி பாஜக வட்டாரங்களில் பேசுனப்ப, ”எங்க கூட்டணியில டிடிவி தினகரன் சேருவது கன்பார்ம் ஆகியிருக்கு.. மோடிஜி மீட்டிங்குல டிடிவியும் இருப்பாரு…தேமுதிககிட்ட தொடர்ந்து பேசிகிட்டே இருக்கோம்.. ” என்கின்றனர்.
தேமுதிக முடிவு செஞ்சுட்டாங்களா?
தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் ”பாஜக டீம்தான் ரொம்பவே எங்ககிட்டு சீரியசா பேசிகிட்டு இருக்காங்க.. ஆனா.. அந்த அளவுக்கு திமுக தரப்புல சீரியசா பேசாம இருக்கிறாங்களே.. இருந்தாலும் அண்ணிதான் (பிரேமலதா) இறுதியான முடிவை சீக்கிரமா அறிவிப்பாங்க” என்கின்றனர்
அதிமுகவுல விசாரிச்சப்ப, “பிரேமலதாகிட்ட எஸ்பி வேலுமணி அண்ணன்தான் தொடர்ந்து பேசுகிட்டு இருக்காரு.. 21-ந் தேதி சென்னைக்கு வரும் பியூஷ் கோயலும் பிரேமலதாவை நேரில சந்திச்சு பேச இருக்கிறாரு. அதுக்கு அப்புறமா சுமூகமாக பைனல் ஆகிடும்”ன்னு நம்பிக்கையா சொல்றாங்கய்யா..
டாக்டர் ராமதாஸ் என்ன முடிவு எடுத்திருக்கிறாராம்?
இதை பத்தி பாமகவில் விசாரிச்சப்ப, “ தைலாபுரத்துல டாக்டர் அய்யா (ராமதாஸ்) தலைமையில நேத்து தலைமை நிர்வாக குழு கூட்டம் நடந்துச்சு.. இதுல கூட்டணியை பத்திதான் பேசுனோம்.. நிறைய பேரு கருத்துகளை சொன்னாங்க.. கடைசியா, ‘அன்புமணி இருக்கிற கூட்டணிக்கு போறது இல்லை’ன்னு முடிவு செஞ்சிருக்காரு டாக்டர் அய்யா.. அன்புமணி இப்ப அதிமுக-பாஜக கூட்டணியில இருக்கிறாரு.. நாங்க அந்த கூட்டணிக்குப் போக வாய்ப்பே இல்லை”ன்னு என்கின்றனர்.
ராகுல் நடத்துன டெல்லி மீட்டிங்குல வேற என்ன ”சிறப்பு”?
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்கிட்ட ராகுல் காந்தி, கார்கே டெல்லியில நடந்த மீட்டிங் எபெக்ட் இன்னமும் ஓடுகிட்டுதான் இருக்கு..
சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார், ராகுல் காந்திகிட்ட ஒன் டூ ஒன் பேசும்போது, “திமுககிட்ட கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்குன்னு கேட்போம்.. அவங்க இல்லைன்னு சொன்னா கூட்டணிக்கான வேற ஆப்ஷனைப் பார்ப்போம்”னு சொல்லி இருக்கிறாரு..
இதே மாதிரிதான் மாணிக்கம் தாகூர் எம்.பி.யும் சொல்லி இருக்காரு..
ஆனா ப.சிதம்பரம் ஒன் டூ ஒன்னா ராகுல் கிட்ட பேசும் போது, ”18 மாசத்துக்கு முன்னாடி நடந்த லோக்சபா எலக்ஷனில நம்ம கூட்டணிதானே அத்தனை சீட்டும் ஜெயிச்சோம்.. 40% வாக்குகளையும் வாங்கினோம்.. இந்த 18 மாசத்துல என்ன நடந்துருச்சுன்னு வேற கூட்டணியை பத்தி பேசனும்”ன்னு சொல்லி இருக்கிறார்.
காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் பலரும், “3 பேர் அமைச்சராகிறது முக்கியம்னு நினைக்கிறாங்க.. ஆனா உள்ளாட்சியில 30,000 போஸ்ட் இருக்கே.. அதுதான் கட்சிக்கே அடிப்படை.. அதை பத்தி யோசிக்காம இருக்காங்க.. உள்ளாட்சியில ஜெயிச்சாதான் கட்சியே இருக்கும்” என புள்ளி விவரமாகவும் ராகுல் காந்தியிடம் சொல்லி இருக்காங்களாம்..
இப்ப ராகுல் காந்திக்கு காங்கிரஸ் லீடர்ஸ் சிலர் ஒரு ரிப்போர்ட் அனுப்பி இருக்காங்க.. அதுல, ‘நம்ம எம்.எல்.ஏக்களை திமுக ‘நல்லா கவனிச்சுருச்சு’.. அதனாலதான் திமுக கூட்டணியில்தான் இருக்கனும்னு அவங்க டெல்லியில மாத்தி பேசிட்டாங்க’ன்னு ரிப்போர்ட்டுல இருக்காம்.. ராகுல் காந்தி இதை பத்தி விசாரிக்க சொல்லி இருக்கிறாராம்” என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக