minnamமின்னம்பலம் : சொன்னமாதிரியே வைத்திலிங்கம் அறிவாலயத்துக்கு போயிட்டாரே?
எந்த பக்கமும் போறதுன்னு முடிவெடுக்க முடியாம ரொம்பவே ஓபிஎஸ் தத்தளிச்சுகிட்டே இருக்கிறாரு.. நீங்க இப்படியே இருங்க.. நாங்க எங்க ரூட்டுல போறோம்னு ஒவ்வொருத்தரா டாட்டா காட்டிகிட்டே இருக்காங்க..
மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினத்தை தொடர்ந்து வைத்திலிங்கம் திமுகவில் இணையப் போறாருன்னு நாம 2 வாரத்துக்கு முன்னரே சொல்லி இருந்தோம்.. அதே மாதிரி வைத்திலிங்கம் அறிவாலயத்துக்கு வந்து சேர்ந்துட்டாரு..
வைத்திக்கு ஒரத்த நாடு தொகுதியா?
எல்லாரும் அப்படித்தான் பேசுறாங்க.. இதை பத்தி அறிவாலய தரப்புல பேசுனப்ப, “ஏற்கனவே பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம்னு பலரையும் திமுகவுக்கு கொண்டு வந்து சேர்த்த செந்தில் பாலாஜிதான் வைத்தி அசைன்மெண்ட்டையும் பக்காவா முடிச்சுட்டாரு..
வைத்தி வெச்ச ஒரே டிமாண்ட் மகனுக்கு ஒரத்தநாடு தொகுதியில சீட் கொடுங்க என்பது மட்டும்தானாம்.. இதுக்கும் சிக்னல் வாங்கி கொடுத்துட்டாரு செ.பா. அப்புறம் என்ன? யாரைப் பத்தியும் கவலைப்படாம சிஎம் ஸ்டாலினை சந்திச்சு திமுகவுல வைத்தி இணைஞ்சுட்டாரு” என்கின்றனர்.
வெல்லமண்டி நடராஜனும் திமுகவுக்கு வருவாருன்னு சொன்னாங்களேய்யா?
வைத்திலிங்கம், வெல்லமண்டி எல்லாரும் ஒன்னாதான் திமுகவுல சேரனும்னு நினைச்சாங்க.. இன்னைக்கு பாஜக கூட்டணியில டிடிவி தினகரன் மீண்டும் சேர்ந்துட்டாரு இல்லையா.. இது நடக்கும்னு தெரிஞ்சுதான் கவுண்ட்டர் அட்டாக்கா வைத்திலிங்கத்தை திமுக இன்னைக்கு சேர வைச்சதாம்..
தனியா தவிக்கும் வெல்லமண்டியும் விரைவில் அறிவாலயத்துக்குள் அடி எடுத்து வைக்கப் போறாராம் என சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக