![]() |
Mukinthan Thurairajasingham : வந்தேறிகள் யார், மண்ணின் மைந்தர்கள் யார் என்பதைத் தெளிவாகப் பிரித்தறிய முடியாத அளவிற்கு, பல இனங்கள் ஒன்றோடொன்று கலந்த உருவான நாடு தான் இலங்கை.
இலங்கை அரசியலில் "சிங்கள பௌத்த தேசியவாதத்தின்" காவலர்களாகக் கருதப்படும் ராஜபக்ச குடும்பத்தின் வரலாறு, பல தசாப்தங்களாகத் தென்னிலங்கையின் கிரிவப்பத்துவ மண்ணோடு மட்டுமே பிணைக்கப்பட்டு பேசப்படுகிறது.
ஆனால், வரலாற்று ஆய்வுகளும் மானுடவியல் தரவுகளும் இவர்களின் வேர்கள் இந்தியப் பெருங்கடலைக் கடந்து இந்தோனேசியாவின் ஜாவா (Java) தீவு வரை நீண்டுள்ளது.
17–18ஆம் நூற்றாண்டுகளில், இன்றைய இந்தோனேசியா (அன்றைய Dutch East Indies) Dutch East India Company (VOC) கட்டுப்பாட்டில் இருந்தது.
VOC ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஜாவா நாட்டின் இளவரசர்கள், அரச குடும்பத்தினர், உயர்மட்ட போர்வீரர்கள் பலர் தண்டனையாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் பிரதானமாக இலங்கையின் தெற்கே உள்ள ஹம்பாந்தோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
ஜாவாவிலிருந்து வந்த போர் வீரர்கள் தென்னிலங்கையில் காவல்பணிகளுக்காக அமர்த்தப்பட்டனர். இவர்களில் சிலர் காலப்போக்கில் உள்ளூர் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்து, பௌத்த மதத்தைத் தழுவி, சிங்கள அடையாளத்தைப் பெற்றனர்.
ஜாவா தீவின் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஹம்பாந்தோட்டையின் 'மகம்பத்துருவ' மற்றும் 'கிரிவப்பத்துவ' பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவர்களே பிற்காலத்தில் அந்தப் பகுதியின் நிலப்பிரபுக்களாகவும், தலைவர்களாகவும் உருவெடுத்தனர்.
அந்த நிலப்பிரபுக்கள் தங்களை “கோவிகம” என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
கோவிகம” என்பது இலங்கை சிங்கள சமூகத்தில் உள்ள பாரம்பரிய சமூக / சாதி அடையாளம்.
“கோவி”என்றால் விவசாயம் “கம” என்றால் சமூகம்.
அதன் பொருள் பழங்காலத்தில் நெல் விவசாயம், நில நிர்வாகம் செய்தவர்கள், அரசர்களுக்கு அருகிலிருந்த நில உரிமையாளர்கள், கிராமத் தலைவர்கள்.
காலப்போக்கில் இவர்கள் அரசியல், நிர்வாகத்தில் செல்வாக்கு பெற்ற சமூகமாக மாறினர்.
அத்துடன் ஜாவாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட உயர்குடி படைவீர்ர்கள் டச்சு மற்று கண்டி மன்னர்களின் மெய்ப்பாதுகாவலர் படைவீரர்களாக திறம்பட சேவையாற்றினர் .
இதற்காக அந்த மன்னர்களினால் “அரச விசுவாசி” அல்லது “மன்னர்களுக்கு பக்கபலமானவன்” என்ற கெளரவப்பட்டமும் வழங்கப்பட்டது.
“அரச விசுவாசி” என்றால் “ராஜபக்ஷ” என சிங்களத்தில் அழைப்பார்கள்.
அந்த நேரம் இவர்களது சேவைகளுக்காக பாரியளவு நிலங்கள் மன்னர்களால் வழங்கப்பட்டது. அதை நிர்வகித்ததனாலேயே “கோவிகம” என்ற பெயரையும் தனதாக்கிக் கொண்டனர்.
மஹிந்த ராஜபக்ச (Percy Mahendra Rajapaksa ) மற்றும் அவரது மூன்று புதல்வர்கள், சகோதரர்களின் முக அமைப்பில் தென்படும் மங்கோலியச் சாயல் (Mongoloid features) அதாவது உயர்ந்த கன்ன எலும்புகள் மற்றும் சிறிய கண்கள் தென்னிந்திய அல்லது பாரம்பரிய ஆரிய சிங்கள முக அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.
இவை இந்தோனேசிய/மலாய் அரச வம்சத்தினரின் தனித்துவமான அடையாளங்களாகும்.
ராஜபக்சக்களின் பூர்வீக இடமான “கிரிவப்பத்துவ”, வரலாற்று ரீதியாகவே ஜாவா நாட்டுப் போர் வீரர்கள் மற்றும் அரச குலத்தினர் செறிந்து வாழ்ந்த இடமாகும்.
இந்தோனேசியாவிலிருந்து வந்த இந்த அரச குடும்பத்தினர் ஆரம்பத்தில் இஸ்லாமியர்களாக இருந்தபோதிலும், உள்ளூர் செல்வாக்கிற்காகவும் சிங்கள நிலப்பிரபுக்களுடனான திருமண உறவுகளுக்காகவும் பௌத்த மதத்திற்கு மாறினர்.
ஜாவா நாட்டு இளவரசர்களின் போர் குணமும், தலைமைத்துவப் பண்பும் ராஜபக்சக்களின் முன்னோர்களுக்கு அந்தப் பகுதியில் பெரும் செல்வாக்கைத் தேடித்தந்தது.
டச்சுக்காரர்களால் கொண்டுவரப்பட்ட இந்த 'வந்தேறி' அரச பரம்பரை, ஒரு சில நூற்றாண்டுகளிலேயே தங்களை "தூய சிங்கள பௌத்தர்களாக" மாற்றிக்கொண்டு அந்த மண்ணின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இலங்கையில் வாழும் மலாய் சமூகத்தினர் (இந்தோனேசிய வம்சாவளியினர்) இன்றும் ராஜபக்ச குடும்பத்தை தங்களின் "தொப்புள்கொடி உறவாகவே" பார்க்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ச அதிபராக இருந்தபோது, இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளுடன் அவர் காட்டிய அதீத நெருக்கம், அரசியல் கடந்த ஒரு "இன ரீதியான ஈர்ப்பின்" (Ethnic Affinity) வெளிப்பாடாகும்.
உணவு முறையில் 'வட்டலாப்பம்' முதல் சமூகச் சடங்குகள் வரை இவர்களிடம் காணப்படும் இந்தோனேசியத் தாக்கம், இவர்கள் அந்த ஜாவா அரச வம்சத்தின் எச்சங்கள் என்பதற்கான கலாச்சார ஆதாரங்கள்.
ஒரு தேசத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்ட எவனும், தன் தாய்மண்ணின் கருவூலத்தை அள்ளிக்கொண்டு போய் அந்நிய தேசத்து வங்கிகளில் பதுக்கமாட்டான்.
இன்று இலங்கைத் தீவு பிச்சைக்கார நாடாக மாறி, நடுத்தெருவில் நிற்பதற்குக் காரணமான ஒரு குடும்பத்தின் செயல்களைப் பார்க்கும்போது, உலகுக்கு ஒரு உண்மை உரக்கத் தெரிகிறது, "வந்தேறிகளுக்கு என்றுமே இந்த மண்ணின் மீது பற்று இருக்காது!"
கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வரிப்பணத்தை, எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வாதாரத்தைச் சூறையாடி, அதனை வெளிநாட்டு ரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்கும் ஒருவன், இந்த மண்ணின் மைந்தனாக இருக்கவே முடியாது.
பூர்வகுடிகளுக்கு நிலத்தின் மீதும், மக்களின் மீதும் ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கும். ஆனால், பிழைப்புத் தேடி வந்தவர்களுக்கும், அதிகாரத்திற்காகப் புகலிடம் தேடி வந்தவர்களுக்கும் இந்த நிலம் வெறும் 'வேட்டையாடும் காடாக' மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
இலங்கையை ஒரு குடும்பமாகச் சேர்ந்து கொள்ளையடித்து, அந்நிய நாடுகளுக்குத் தாரைவார்த்து, நாட்டைச் சுடுகாடாக்கிய இராஜபக்சக்களின் துரோகம் ஒன்றையே சான்றாகச் சொல்லலாம்.
அவர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் அல்ல!
வரலாறு எப்போதுமே உண்மையை நீண்ட காலம் மறைத்து வைப்பதில்லை. டச்சுக்காரர்களால் இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் இருந்து பிழைப்புக்காகவும், போர்ச் சேவகத்திற்காகவும் கொண்டுவரப்பட்டவர்களே இந்த இராஜபக்சக்களின் முன்னோர்கள்.
இவர்களின் முக அமைப்பிலும், உடல் மொழியிலும் தென்படும் அந்த மங்கோலிய (மலாய்/ஜாவா) சாயல், இவர்கள் தெற்காசிய நிலப்பரப்புக்குச் சொந்தமானவர்கள் அல்ல என்பதை இன்றும் பறைசாற்றுகிறது.
வந்தேறிகள் எப்போதும் தங்களை 'அதிதீவிர தேசப்பற்றாளர்களாக'க் காட்டிக்கொள்வார்கள். அந்த முகமூடியைப் போட்டுக்கொண்டுதான், சிங்கள மக்களை ஏமாற்றி, நாட்டை மொத்தமாகக் கொள்ளையடித்தனர்.
இலங்கையின் இன்றைய அவலநிலை என்பது வெறும் பொருளாதார வீழ்ச்சி அல்ல, அது ஒரு வந்தேறி கும்பல் திட்டமிட்டு நடத்திய 'பொருளாதாரப் படுகொலை'.
தன் தாய்மண்ணைச் நேசிக்கும் ஒருவன் அதன் வளத்தைச் சிதைக்கமாட்டான். ஆனால், பிழைப்புக்காக வந்த இராஜபக்சக் குடும்பம், நாட்டை நாசமாக்கியதன் மூலம் தாங்கள் இந்த மண்ணிற்குச் சொந்தமானவர்கள் இல்லை என்பதைத் தாங்களே நிரூபித்துவிட்டனர்.
இலங்கை மண்ணின் உண்மையான மைந்தர்கள் வீதியிலும், நாட்டைச் சூறையாடிய வந்தேறிகள் சொகுசு மாளிகைகளிலும் இருப்பது காலத்தின் கொடுமை!
ராஜபக்சக்கள் தங்களை 'தூய சிங்களவர்கள்' என்று அரசியலுக்காகக் காட்டிக்கொண்டாலும், அவர்களின் வேர்கள் இந்தோனேசிய மலாய்க்காரர்கள் ஜாவானீசியர் ஆகியோரின் கலவையே ஆகும்.
இலங்கைத் தீவு என்பது வந்தேறிகளின் சங்கமம் என்பதையே மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக