செவ்வாய், 20 ஜனவரி, 2026

சிபிஐயிடம் திணறிய விஜய்.. உள்ளே வரும் ‘அமித்ஷா’.. வெளியாகும் ‘தடாலடி’ முடிவு? D

மின்னம்பலம் - Mathi : வைஃபை ஆன் செய்ததும், ”எத்தனை எத்தனை அதிசயங்கள் அணிவகுக்கப் போகிறதோ” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா ஆச்சரியம், அதிசயம்னு சொல்லிகிட்டு.. டெல்லிக்கு விஜய் போனாரே அதை பத்தி சொல்லுமய்யா..
சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு விஜய் போனதுக்கும் நான் சொல்றதுக்கும் கனெக்‌ஷன் இருக்குய்யா..
டெல்லிக்கு போறதுக்கு முன்னாடி விஜய், பல முறை மீட்டிங் நடத்தினாரு.. புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல்குமாரை கூப்பிட்டு சிபிஐ ஆபீசர்ஸ் கேட்ட கேள்விகள், சொன்ன பதில்கள்.. அதுல இருக்க லாஜிக்குகள்னு எல்லாத்தையும் கவனமாக அலசி ஆராய்ந்து பக்காவா ரெடியாகிட்டுதான் இந்த முறை டெல்லி போனாங்க..
டெல்லி சிபிஐ ஆபிசில இந்த முறை என்ன நடந்துச்சு? என்ன கேள்விகள் கேட்டாங்கன்னு சிபிஐ அதிகாரிகள்கிட்ட நாம பேசுனோம்.. அவங்க சொன்னதை அப்படியே ஷேர் செய்யுறேன்.. நல்லா கேட்டுக்கய்யா..

நம்மகிட்ட பேசுன சிபிஐ அதிகாரிகள், “போன டைம் வந்த மாதிரியே இந்த முறையும் விஜய், வக்கீல் நிர்மல்குமார், அப்புறமாக வளர்ந்தவர் ஒருவர் இருப்பாரே (ஆதவ் அர்ஜூனா) அவங்க மூணு பேரும் எங்க ஆபீசுக்கு வந்தாங்க..



இந்த முறையும் விஜய்யையும் நிர்மல்குமாரையும் மட்டும் உள்ள அனுப்பினோம்.. இன்னொருத்தரை (ஆதவ்) ரிஷப்ஷனில உட்கார வெச்சுட்டோம்..

பர்ஸ்ட் டைம் அப்படிங்கிறதால போன முறை கொஞ்சம் சீரியசாகத்தான் எங்க ஆபீசர்ஸ் எல்லாமே இருந்தோம்.. இந்த முறை கேசுவலாகத்தான் டீல் செஞ்சோம்.. முதல்ல கொஞ்ச நேரம் விஜய், நிர்மல்குமார் கிட்ட சோபாவுல உட்கார்ந்து இயல்பாகத்தான் பேசிகிட்டு இருந்தோம்..

அப்புறம் விசாரணை நடந்த ரூமுக்கு விஜய்யை மட்டும் போக சொன்னோம்.. பக்கத்துல அறையில நிர்மல்குமாரை உட்கார அனுமதிச்சோம்..

எங்க கொஸ்டின்ஸ் எல்லாம் இந்த டைம் ரொம்ப கேசுவலாத்தான் கேட்டோம்..

    கரூருக்கு நீங்க புறப்பட்டடைம் என்ன?
    நீங்க கூட்டத்துக்கு ஏன் லேட்டா போனீங்க?
    இவ்வளவு கூட்டம் வரும்னு எதிர்பார்த்து ஏன் ஏற்பாடுகளை சரியா செய்யாம இருந்தீங்க?
    இத்தனை பேரு இறந்தது உங்களுக்கு எப்ப தெரியும்?
    ஏன் நீங்க கரூருக்கு போகாம சென்னைகு ரிட்டர்ன் ஆனீங்க?
    இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கே.. அதுக்கு நீங்கதானே பொறுப்பு?

இப்படி முக்கியமான கேள்விகளைத்தான் கேட்டோம்.

சில கேள்விகளுக்கு விஜய் பதில் சொல்லாம இருந்தாரு.. ஆனா போன முறை என்ன பதில் சொன்னாரோ அதே பதிலை அச்சு பிசகாம இந்த முறையும் சொன்னாரு.. அவ்வளவு ஞாபகம் வெச்சிருந்து அப்படியே சொன்னது எங்களுக்கே ஆச்சரியம்தான் சார்..

அப்ப, “கரூரில இருந்து நாங்க கிளம்பும் போது எங்களுக்கு இறப்புகளைப் பத்தி எதுவும் தெரியாது.. நிர்மல்குமார்தான் எஸ்பிகிட்ட பேசிகிட்டு இருந்தாரு.. அவங்களும் ஆரம்பத்துல இறப்பை பத்தி ஒன்னும் சொல்லலை.. அதனாலதான் நான் சென்னைக்கு ரிட்டர்ன் ஆனேன்..” என்று விளக்கமும் தந்தார் விஜய்..

41 பேர் உயிரிழந்ததை பத்தி கேட்டப்ப கலங்கிட்டாரு.. “அவங்க எல்லாம் எவ்வளவு எதிர்பார்ப்போடு எங்க கூட்டத்துக்கு வந்திருப்பாங்க.. அவங்க வாழ்க்கையில எவ்வளவு கனவுகள் இருந்துருக்கும்.. இத்தனை பேரு அநியாயமா இறந்துட்டாங்களே சார்..

நீங்க நியாயமா விசாரணை நடத்துங்க.. இதுல தப்பு செஞ்ச எந்த ஒரு அதிகாரியையும் விட்டு வைக்காதீங்க.. அவங்களை எல்லாம் நிச்சயம் தண்டிக்கனும்”னும் விஜய் எங்ககிட்ட ஆதங்கத்துடன் சொன்னார்..

அதுக்கு, “எந்த பாரபட்சமுமே இல்லாமத்தான் விசாரணை நடத்திகிட்டு இருக்கோம்..”னு எங்க ஆபீசர்ஸ் பதில் சொன்னாங்க..

போன டைம் விஜய் மதிய லஞ்ச் சாப்பிடாம பேக்குல வெச்சிருந்த பிஸ்கட்தான் சாப்பிட்டாரு.. இந்த டைமும் நாங்க ”சாப்பாடு அரேஞ்ச் செய்யவா?”ன்னு கேட்டோம்.. அவங்க வெளியே இருந்து ஆர்டர் செஞ்சுகிட்டாங்க..

இடையில, விஜய் பேரை குற்றப்பத்திரிகையில் சேர்க்குறதா டிவியில பிளாஷ் நியூஸ் ஓடுனப்ப.. எங்க மத்த ஆபீசர்ஸ்கிட்ட இப்படி ஒரு செய்தி வருதுன்னு பக்கத்துல ரூமில இருந்த நிர்மல்குமார் சொல்லிவிட்டாரு..

விஜய்யும் எங்க ஆபீசர்ஸ்கிட்ட கேட்டாரு.. ”இப்போதைக்கு அதெல்லாம் இல்லையே”ன்னு சொல்லிட்டோம்..

அதைத்தான் வெளியே நிர்மல்குமார் மூலமாக பிரஸ் மீட்டுல விஜய் சொல்ல சொல்லி இருந்தாரு..

எங்க விசாரணையே இந்த முறை லைட்டா இருந்துச்சு.. போன டைம் கூட இறுக்கமாத்தான் வெளியே போனாரு… இந்த டைம் விசாரணை முடிஞ்சப்ப வெளியே இருந்த பேன்ஸ், ஜேர்னலிஸ்ட் எல்லாரையும் பார்த்து கை காண்பிச்சுட்டுதான் கேசுவலா கிளம்பினாரு.. இதுதான் சார் இந்த டைம் நடந்தது” என சொல்லி முடித்தனர் சிபிஐ அதிகாரிகள்.

சரி.. டெல்லியில அவங்களை, இவங்களை எல்லாம் சந்திக்க ப்ளான்னு சொன்னாங்களே?

இதை பத்தி விசாரிச்சோம்யா.. “ராகுல் காந்தி சைடுல சிலர் சந்திக்க விரும்புறதா சொல்லி இருந்தாங்க.. இந்த மாதிரி நேரத்துல ராகுல் காந்தியை சந்திச்சு பேசப் போய்.. பாஜக லீடர்ஸ் இன்னும் கோபமாகிட்டா என்ன செய்யுறதுன்னு யோசிச்சுட்டு சந்திப்புகளுக்கு ‘நோ’ சொல்லிட்டார் தளபதி என தவெக தரப்புல சொல்றாங்க..

அதே நேரத்துல டெல்லி சோர்ஸ்கள்கிட்ட பேசுனப்ப, “தவெக அருண்ராஜ்கிட்ட சில அதிகாரிகள் பேசிப் பார்த்திருக்காங்க.. நீங்க ஏன் சார் அமித்ஷாஜிகிட்ட பேசக் கூடாது? ஜனநாயகன் சென்சார், சிபிஐ விசாரணை எல்லாமே சட்டுனு முடிஞ்சிடும்னு பேசுனாங்க..

ஆனால், ஏற்கனவே 41 பேர் இறந்த சமயத்துல ராகுல் பேசுன மாதிரியே விஜய்கிட்ட அமித்ஷா பேசியிருந்தாரு.. ஜான் ஆரோக்கியசாமிதான் போனை கொண்டு போய் விஜய்கிட்ட கொடுத்தாரு..

இந்த டைம் அமித்ஷாஜிகிட்ட பேசுனா ஏதாவது அரசியல் ரீதியா சிக்கல் வரும்னு ரொம்பவே விஜய் தரப்புல யோசிக்கிறாங்க..

அதுவும் திமுக கூட்டணியைவிட்டு காங்கிரஸும் வர்ற மாதிரி இல்லை.. அதனால ரொம்பவே விஜய் தரப்புல யோசிக்கிறாங்க சார்” என்கின்றனர்.

ஆமாய்யா ஒரு சந்தேகம்.. காங்கிரஸும் கூட்டணிக்கு வரலை.. பிஜேபியும் சகட்டுமேனிக்கு நெருக்கடி கொடுக்குது.. சரி விஜய்க்கு இப்ப இருக்கிற ஆப்ஷன்ஸ்தான் என்னவாம்?

நீரு அப்படி கேட்டதால இந்த ஆப்ஷன்ஸ் பத்தி அரசியல் வட்டாரங்களில் விசாரிச்சேன்யா..

அவங்க சொல்றது என்னான்னா, ”அதிமுக- பாஜக கூட்டணிக்கு தவெகவை கூப்பிடுறாங்க.. டெபுட்டி சிஎம் போஸ்ட், கணிசமான தொகுதிகள, தேர்தல் செலவுன்னு எல்லாத்தையும் பார்த்துக்குறா சொல்லி இருக்காங்க.. அதனால அங்க போகலாம்.. இது ஒரு ஆப்ஷன்

இன்னொன்னு.. கொள்கை எதிரி.. அரசியல் எதிரின்னு பாஜக- திமுக ரெண்டுகளையும் சமமாக எதிர்க்கிறது.. எத்தனை கட்சிகள் வருகிறதோ அவங்களை கூட்டணியில சேர்த்துக்கிறது..

ஏன்னா, கரூர் சம்பவம், ஜனநாயகன் பிரச்சனை, சிபிஐ விசாரணைன்னு அடுத்தடுத்த நிகழ்வுகள் எல்லாமே விஜய்- தவெக மேல ரொம்பவே அனுதாபத்தை ஏற்படுத்திகிட்டு இருக்குன்னு ஆதவ் அர்ஜூனா டீம் எடுத்துகிட்டு இருக்கிற சர்வே ரிப்போர்ட்ஸ் சொல்லுதாம்.. அப்படி ”தனித்து களமிறங்கி அடிச்சா திமுகவுக்கு கடுமையான போட்டியை தர முடியும்.. நாம நிச்சயம் ஜெயிக்க முடியும்”னு நினைக்கிற தவெக லீடர்ஸோட விருப்பம்தான் இரண்டாவது ஆப்ஷன்.

இந்த இரண்டுமே இல்லைன்னா.. இந்த டைம் எலக்‌ஷனையே புறக்கணிச்சுட்டு போறது.. அதாவது “தேர்தல் புறக்கணிப்பு”ன்னு முடிவெடுத்துட்டு அதுக்கு கரூர் உயிரிழப்பு மாதிரி ஏதாவது காரணத்தை சொல்றது.. அல்லது திமுக- பாஜக மேல பழிபோடுறதுன்னு ஏதாவது ஒன்னை சொல்லலாம்..

இந்த 3 ஆப்ஷன்ஸ்ல தனிச்சே போட்டியிட்டு ஒரு கை பார்ப்போங்கிற செகண்ட் ஆப்ஷன்லதான் விஜய் உறுதியா இருக்கிறாராம் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
 

கருத்துகள் இல்லை: