ராதா மனோகர் : good touch bad touch fake touch
அதாவது நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் போலி தொடுதல்!
கேரள பேருந்து ஒன்றில் ஒரு பெண் யுடுபர் செய்த ஒரு செயல் உண்மையில் மகளிர் உரிமைகளுக்குகாக போராடுபவர்களை ஒரு சிக்கலான விவாதத்திற்குள் தள்ளி இருக்கிறது.
காலகாலமாக பெண்களே எதிர்கொள்ளும் ஒரு விடயத்தை பற்றி ஆண்களின் தரப்பு கருத்துக்களை இந்த சம்பவம் கொஞ்சம் தொட்டு இருக்கிறது.
இது போன்ற விடயங்கள் இலங்கை இந்தியா மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள நிலைமைகளோடும் ஒப்பிட்டு பார்க்கவேண்டி உள்ளது.
குறிப்பிட தக்க அளவில் இந்திய இலங்கை மக்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.
குறிப்பாக மணமுறிவு போன்ற பல விடயங்களில் ஆண்களே இந்நாடுகளில் அதிகமாக பாதிக்க படுகிறார்கள் என்றும் கூட கருதப்படுகிறது.
பெண்ணுரிமை பேசுவதற்கு பலர் உள்ளார்கள்
ஆணுரிமை பேசுவதற்கு ஆண்களே கொஞ்சம் தயங்கும் நிலை இருக்கிறது.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் அதிகமாக பாதிக்க படுவதால் அதை பற்றி பொதுவெளியில் அதிகம் தரவுகள் உள்ளன.
ஆனால் பாதிக்கப்படும் ஆண்கள் பற்றி பேசுவதற்கு எந்த எஞ்சியோவாவது இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.
குறைந்த பட்சம் பொதுவெளியில் பாரபட்சம் இல்லாமல் இவை பேசப்படவேண்டும்.
இந்த வகையில் தோழர் நளினி ரத்னராஜா அவர்கள் தொடக்கி வாய்த்த இந்த கருது பரிமாறல் ஒரு ஆரோக்கியமான விவாதம் என்று கூறலாம்.
இதில் கருத்துக்களை முன்வைத்த அனைவரும் பாராட்ட படவேண்டியவர்கள்.
S T Nalini Ratnarajah : கேரளாவில் ஒரு பெண் தன்னை பொதுப் போக்குவரத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக போடப்பட்ட வீடியோவால் ஒரு உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது.
இதைப் பற்றி பலரும் பல விதமாக எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் ஆழமாக ஒரு உண்மையை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்
அதாவது பெண்களுக்கு இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் வன்முறைகள் வன்புணர்வுகள் நடக்காமலே இருந்தால் அதாவது ஒரு சம்பவம் கூட நடக்காமல் இருந்தால் இப்படியான பொய் குற்றச்சாட்டுகளை பெண்கள் சுமத்த முடியாது என்பதுதான் உண்மையான விடயம் அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்றங்கள் நடந்தால் அதை சாக்காக வைத்துக் கொண்டு பொய்க் குற்றம் பெண்கள் சுமத்துவார்கள். அது நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதற்கு ஒரே ஒரு வழி, ஆண்களும் பெண்களும் சேர்ந்து பெண்களுக்கு வீட்டிலும் வீதியிலும் பொது போக்குவரத்திலும் தொழில் இடங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் சகல விதமான பாலியல் குற்றங்களை அறவே நடக்காமல் நிறுத்த வேண்டும்.
இந்த குற்றங்கள் முற்றாகவே நிறுத்தப்படும் வரை பல ஆண்கள் பாதிக்கப்படுவார்கள் அது தவிர்க்க முடியாதது.
Pragash Y Rajarathnam : ம....ரு , இவளுகள் எல்லாம் பெரிய உத்தம பருப்புகள் ... பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் அதில் மாற்று கருத்தில்லை, விருப்பமில்லாத பாலியல் சீண்டல்களும் தவறு .... அதற்காகவெல்லாம் ஒவ்வொரு பொம்பிளையும் ஆண்கள் மீது பழி சுமத்துவதையோ, இது போன்ற எருமைகள் தங்கள் பிழைப்பிற்கு ஒரு உயிரை பறித்ததையோ பார்த்துக்கொண்டிருக்க முடியாது
S T Nalini Ratnarajah - Pragash Y Rajarathnam இப்படியான குற்றங்கள் சமூகத்தில் நடக்காவிட்டால் இப்படியான குற்றச்சாட்டுகளை யாரும் முன் வைக்க முடியாது அதில் தான் கவனம் செலுத்த வேண்டும் உங்களுக்கு வரும் ஆத்திரத்தை இப்படியான ஒரு குற்றம் சமூகத்தில் யாருக்கும் எப்போதும் எங்கேயும் யாராலும் நடக்கக்கூடாது என்பதில் காட்ட வேண்டும்
Pragash Y Rajarathnam : உங்கள் கூத்து மிகவும் அருமையாக உள்ளது ... அது சரி என்றால் இதுவும் சரி என்பது போன்றது உங்கள் கூற்று ... ஓமோம் ... சமூகத்தில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் நாங்கள் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கே வேண்டும் மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருப்பார்கள் ... குழந்தைகளுக்கு, வயோதிபர்களுக்கு , மாற்றுத்திறனாளிகளுக்கு, சமூகத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவலாம் , உலகம் எத்தனை நீதிகளை இயற்றினாலும் ... படைப்பின் சாராம்சமும் விலங்கின் காட்டின் கொள்கையும் ஒன்றே ... எதிர்ப்பால்கள் ஈர்க்கப்படும் ... இதை பூச்சியமாக்குவது எந்தவொரு சட்டத்தினாலும் இயலாத காரியம், சிறந்த கல்வியும், தனிப்பட்ட ஒழுக்கத்தினாலும் மாத்திரமே இயலும் .... முகநூலில் வரும் ரீல்களில் 5 இற்கு ஒன்று பெண்கள் தங்கள் உடம்பை வைத்து கவர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது ... ஏன் இதனை செய்கிறார்கள் ... இவர்களுக்கு தெரியாதா ... இது ஒரு கவறுதலின் நவீன வடிவம் ... வசதி இருப்பவன் இலகுவான வழியை தெரிவு செய்கிறான் .. இயலாதவன் கொடூர முறைக்கு செல்கின்றான் ... நான் படித்த வரலாற்று நூல்களின் படி இது இரண்டும் மாறப்போவதில்லை
Noorul Aleem - Pragash Y Rajarathnam உங்கள் கருத்து யதார்த்தமானது, Ms. நளினி ரட்ணராஜா போன்றோர் ஒரு சமூக தவறை நேரடியாக பார்த்து கருத்து பகிர்கின்றனர் ஆனால் அந்த தவறுக்காக மூல கரணம் என்ன என்பதை கண்டறிந்து கருத்து கூற மறுக்கின்றனர், பாலியல் ஈர்ப்பு என்பது இயற்கையானது, அந்த ஈர்ப்பினால் இடம்பெறும் சிறு சிறு தவறுகளை பெரிதாக தூக்கி பிடித்தால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
வெறும் ஆலோசனைகளால் மட்டும் இப்படிப்பட்ட தவறுகளை நிறுத்திவிட முடியாது,அதற்க்கு அப்பால் சென்று இந்த தவறுகள் நடக்க இருக்கும் சந்தர்ப்பங்களை இல்லாது பண்ண வேண்டும். பாலியல் ஈர்ப்பு சம்பந்தமான முறைதவறிய மனித தவறுகளை முறியடிக்க வேண்டுமானால் அதற்க்கு பல பொறிமுறைகள் உள்ளன அவைகளை கண்டறியவேண்டும்.
பெரும்பாலும் அரேபிய நாடுகளில் பல் தேச மக்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்தாலும் அங்கு பொது போக்குவரத்துகளில் ஆன் பெண் இருபாலாரும் பயணித்தாலும் இவ்வாறான பாலியல் சேட்டைகளோ அல்லது வீண்பழி சுமத்தல்களோ இடம்பெறுவதில்லை, வீண் பேச்சுக்களையும், அதிமேதாவித்தனமான கருது கூறல்களையம் நிறுத்தி விட்டு குற்றத்தை எந்த வழியில் தடுக்க முடியுமோ அந்த வழிமுறை பற்றி மட்டும் கருத்து கூறுங்கள்.
S T Nalini Ratnarajah - Noorul Aleem பாலியல் குற்றங்கள் உங்களுக்கு சிறு தவறா இப்படியான மனநிலையில் உள்ளவர்கள் தான் இந்த பிரச்சனை
S T Nalini Ratnarajah - Pragash Y Rajarathnam உங்களுடைய கருத்தும் இங்கே கருத்து போட்டவர் மற்றவர்களின் இலையும் தான் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது இதுதான் சமூகத்தின் மனநிலை கவர்ச்சி நடக்கலாம் தப்பில்லை பெண்கள் தான் காரணம் கீழே ஒருத்தர் சொல்லியிருக்கிறார் சாதாரணமான பாலியல் துஷ்பிரயோகமா இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாதா இதுதான் இந்த குற்றங்களுக்கும் காரணம் இந்த விடயங்களை சாக்கு வைத்து தான் பெண்களும் இப்படி நடக்கிறார்கள்
Pragash Y Rajarathnam - S T Nalini Ratnarajah எனது கருத்துக்கு மாத்திரம் பதில் சொல்லுங்கள் ... இன்னொருவரோ சமூகமோ நான் அல்ல ... எனது கருத்தில் உள்ள தவறை அல்லது குறைப்பாட்டை சுட்டிக்காட்டுங்கள் பதில் அளிக்கின்றேன் ... இங்கு நான் கூறிய ஒரே விடயம் நீங்கள் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதால் அவர் தற்கொலை செய்துகொள்வதில் தவறில்லை என்ற உங்களின் வாதமே ... நல்லா இருக்கு ஒரு சமூக சேவையாளரின் கருத்து ... இன்று அந்த பெண்ணை கைது செய்திருப்பதாக அறிந்தேன் ....
S T Nalini Ratnarajah - Pragash Y Rajarathnam நான் சொல்லாத ஒன்றை நீங்கள் கற்பனை பண்ணி அதாவது உங்களுக்கு புரிந்ததை வைத்துக் கொண்டு அல்லது என்னுடைய பதிவை நீங்கள் மொழிபெயர்த்திருக்கும் முறைக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் நான் சொன்னது திரும்பவும் சொல்கிறேன் இப்படியான குற்றங்கள் உலகில் யாருக்கும் நடக்கக்கூடாது பாலியல் குற்றங்கள் நடக்காத ஒரு நிலை இந்த உலகில் வந்தால் இப்படியான பொய் வதந்திகளை யாரும் சொல்ல முடியாது
Noorul Aleem - S T Nalini Ratnarajah இன்றைய உலகில் பொது போக்கு வரத்து பஸ்களில் ரயில்களில் ஆணும் பெண்ணும் பயணம் போகும் போது ஒருவருக்கு ஒருவர் உரசிகொள்வது அந்த வாகனங்களில் உள்ள cctv கேமராக்களில் பத்தியபட்டுள்ளது, மிக தெளிவான ஆதாரம், மேடம் அதை கொண்டு போய் நீதிமன்ரில் கொடுத்து சம்பந்தபட்டவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க முடியுமா? இங்கே முகநூலில் வெற்று பேச்சு பேசுவதை விட அதை செய்யலாமே.
Ganga Jeyabalan : பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மலிந்த சமூகத்தில் பொய்க் குற்றச்சாட்டால் ஒரு ஆண் தற்கொலை செய்தது பெரிய விடயம் இல்லை என்று நீங்கள் நியாப்படுத்தும் விதம் ஏற்றுக் கொள்ள முடியாது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கதை. நீங்கள் வழமையாக அளந்து விடும் மனித உரிமைகள் கதைக்கும் இறந்தது ஒரு ஆணாக இருப்பதால் அந்த உயிர் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அல்ல. இவை தவிர்க்க முடியாதது எனக் கூறுவது பஞ்சோந்தித்தனம். இறந்த தீபக் சமூக வலைத்தளத்தில் அதிக கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு பேராசை பிடித்த பெண் திட்டமிட்டு வெளியிட்ட ஒரு காணொளியால் அவர் இறந்துள்ளார். இந்த விடயத்தில் காணொளி வெளியிட்ட பெண் மட்டும் குற்றவாளி இல்லை. அந்தக் காணொளியை பகிர்ந்து இறந்த தீபக்கை சைபர் பகிடிவதை செய்தவர்களும் காரணமாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இப்படியான சம்பவங்களுடன் ஒப்பிட்டு மலினப்படுத்தக் கூடாது.
S T Nalini Ratnarajah - Ganga Jeyabalan கங்கா ஒரு கருத்துக்கு கருத்தை மட்டும் சொல்லுங்கள் கொஞ்சம் பழகிக் கொள்ளுங்கள் அதை விடுத்து தனி நபர் தாக்குதல்கள் தேவை இல்லை நீங்கள் பாவி திரூக்கும் வசன நடை ஒரு ஆரோக்கியமான கருத்து சொல்வதற்குரிய முறையாக இல்லை. நான் ஏற்கனவே கூறி இருப்பது மாதிரி எவருக்கும் எந்த பெண்ணுக்கும் பாலியல் துஷ்பிரயோகம் நடக்கக்கூடாது அப்படி ஒரு நிலை இருந்தால் பொய் குற்றச்சாட்டுகளை பெண்கள் கொண்டு வர முடியாது. கடைசியாக நான் என்னுடைய பார்வையில் எனக்கு சரி என்று பட்டதை நான் எழுதுவேன் உங்கள் வார்த்தைகள் நீங்கள் புரிந்து கொள்ளும் விதத்திற்கும் நான் பொறுப்பல்ல
Thasanthan Thevakumar : Nee thirunthu ulagam thaana thirunthum
HAmOuD CEzNi : பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதும், அதே சமயம் தவறான குற்றச்சாட்டுகளால் நிரபராதிகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதும் மிக முக்கியம். சட்டமும் சமூகமும் இந்த இரண்டு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி ஒருவரைத் தவறாக சித்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
S T Nalini Ratnarajah -HAmOuD CEzNi என்னுடைய பதிவை மீண்டும் வாசியுங்கள் சமூகத்தில் எப்படி ஒரு குற்றம் நடக்கவே கூடாது அப்படி இருந்தால் எப்படி பொய் குற்றச்சாட்டுகளை சொல்ல முடியும் நடக்கவே கூடாது ஜீரோ இருக்க வேண்டும் அந்த நிலை எப்போது வருகிறதோ அப்போதுதான் இப்படியான பொய் குற்றச்சாட்டுகள் ஓய்ந்து போகும்
HAmOuD CEzNi : S T Nalini Ratnarajah உங்கள் கருத்தை நான் மீண்டும் ஆழமாக வாசித்தேன். அதன் சாராம்சம் எனக்குப் புரிகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே மிக முக்கிய குறிக்கோள். அது நடந்தால், நீங்கள் சொன்னது போல பொய்யான புகார்கள் தானாகவே மறைந்துவிடும். இதுவே ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் நிலையாக இருக்கும். இருப்பினும், உண்மையான குற்றங்களை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு பொய்யான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் நிரபராதிகளைப் பாதுகாப்பதும் முக்கியம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக