சனி, 24 ஜனவரி, 2026

ஷேக் ஹசீனா! ஆவேச பேச்சு! இந்தியாவில் தஞ்சம் அடைந்த பின் முதல் முறை.. பொதுநிகழ்ச்சியில் உரை...

 tamil.oneindia.com  -Mani Singh S  :  டெல்லி: வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் ஆடியோ வாயிலாக உரையாற்றியிருக்கிறார். இதில் முகம்மது யூனுஸை கடுமையாக சாடினார். வெளிநாட்டு கைப்பாவையாக செயல்படும் முகம்மது யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச அரசு வலியுறுத்தி வருகிறது.


Sheikh Hasina Bangladesh Muhammad Yunus

எனினும், இவ்விவகாரத்தில் இந்தியா, வங்கதேசத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. வங்கதேசத்தில் தற்போது முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அவரது ஆட்சியில் அங்கு வன்முறை வெறியாட்டம் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்த பிறகு பொதுநிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா ஆடியோ வாயிலாக உரையாற்றியிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற வெளிநாட்டு செய்தியாளர்கள் மன்றத்தில் ஆடியோ மூலம் ஷேக் ஹசீனா ஆற்றிய உரையில் முகம்மது யூனுஸை கடுமையாக சாடினார். ஷேக் ஹசீனா கூறியதாவது:-
யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும்

சட்டவிரோத ஆட்சியை நடத்தி வரும் முகம்மது யூனுஸ் நாட்டை பயங்கரவாதம், சட்ட ஒழுங்கின்மை, ஜனநாயக ஒருங்கிணைப்பு கொண்டதாக மாற்றி ஆட்சி நடத்தி வருகிறார். வங்கதேச அரசியல் அமைப்பு இறையாண்மை நெருக்கடியில் உள்ளாகியுள்ளது. வெளிநாட்டு கைப்பாவையாக செயல்படும் முகம்மது யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

பயங்கரவாத யுகத்தில் மூழ்கியுள்ளது. முகம்மது யூனுஸ் ஒரு கொலைகார ஃபாசிஸ்ட், அதிகார வெறி பிடித்தவராக உள்ளார். பண மோசடிக்காரர். வங்கதேசத்தில் தற்போது வாழ்க்கைக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு இல்லை. நாட்டை காட்டிக்கொடுத்து முகம்மது யூனுஸ் நமது அன்புக்குரிய தாய்நாட்டை பேரழிவை நோக்கித் தள்ளுகிறார்" என்று கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

"வங்கதேசத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்தான் ஷேக் ஹசீனா இந்த உரையை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வங்கதேச வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனாவின் ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.
பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்

ஷேக் ஹசீனா இதில் மேலும் பேசியதாவது:- வங்கதேசத்தில் சட்டவிரோத யூனுஸ் ஆட்சி நிர்வாகத்தை அகற்ற வேண்டும். ஜனநாயகத்தை மீண்டும் நிறுவ வேண்டும். நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்துவது அவசியம்.

யூனுஸ் குழுவின் நிழல் நீடிக்கும் வரை வங்கதேசத்தில் ஒருபோதும் நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை. ஐக்கிய நாடுகள் அவை பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். உண்மையை வெளிக்கொண்டு வருவதன் மூலமே நாட்டை முன்னேற்றம் அடைய வைக்க முடியும்" என்றார்.

கருத்துகள் இல்லை: