சனி, 24 ஜனவரி, 2026

குன்னம் தொகுதியா வேண்டவே வேண்டாம் ... மயிலாடுதுறையா தாங்க தாங்க தாங்க

 Giri Sundar :  இரண்டு விஷயங்கள் சொல்லப்போகின்றேன். இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையா இல்லையா என்கிற பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்யாதீர்கள். ஜஸ்ட் படிச்சுட்டு போய்கிட்டே இருங்கள்.
இரண்டு தொகுதிகள்:
1.குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் சேர்ந்த குன்னம் தொகுதி. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு போக்குவரத்துத்துறை - மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சி சார் அவர்கள். 
தொகுதியில் ஒரு பிரச்சனையெனில் ""ஆய்வு'' செய்தலெல்லாம் அடுத்த்தது தான். முதலில் ""தீர்வு''. பின்னர் தான் அந்த சமாச்சாரம் நல்லவிதமாய் முடிந்ததா என்பது குறித்தான ""ஆய்வு''. தொகுதி நிதியிலிருந்து சும்மாங்காட்டியும் ""பேருந்து நிறுத்தம்'' கட்டுவதெல்லாம் அமைச்சர் தன் ""தொகுதி சேவை'' க்கான கணக்கில் கொள்வதில்லை. அதல்லாம் போகிற போக்கில் செய்து வருகின்றார். ஆனால் அவர் செய்யும் சேவை என்பதெல்லாம் பெரிய லெவலில் இருக்கின்றன. தொகுதியின் அடிப்படை தேவைகள் இனி இல்லையெனும் அளவுக்கு எல்லாமே சேச்சுரேட்டட் அங்கே. 



தொகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான விஷயங்கள், அரசின் நலத்திட்டங்கள் அடித்தட்டு வரை சென்று பாய்கின்றதா என ட்ராக் செய்தல், விவசாயிகளுக்கான புதிய இலவச மின்சார இணைப்புகள், எல்லா வழித்தடத்திலும் மகளிர் விடியல் பேருந்துகள், நீண்ட தூர பயணங்களுக்கு  குறிப்பாக தலைநகரம் சென்னைக்கு செல்ல விரைவு பேருந்துகள், சுற்றிலும் இருக்கும் சிமெண்ட் கம்பனிகளின் பணிக்கு உள்ளூர் மக்களுக்கான பணி வாய்ப்புகள், சிமெண்ட் லாலிகள் செல்ல தரமான அகல சாலைகள், பிரதான விவசாயமான முந்திரிக்காடுகளை பாதுகாத்தல், முந்திரி ஏற்றுமதிக்கான வழிவகைகள், ஒரு காலத்தில் நக்சல் பாதையில் பயணித்த இளைஞர்களை ஜனநாயக பாதைக்கு திருப்புதல், அதற்காக அந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள், கல்வியில் பின் தங்கியிருந்த மாவட்டத்தை தமிழ்நாட்டின் நம்பர் 1 இடத்துக்கு கொண்டு வர தன் சொந்த அறக்கட்டளை சார்பாக (10,11,12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு தேர்வுக்கான ""நோட்ஸ்'' வழங்குதல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதல்லாம் பொதுமக்களுக்கு. 
கட்சிக்காரர்களுக்கு அபாரமான உதவிகள். மாவட்ட திமுக அலுவலகம் ""கலைஞர் அறிவாலயம்'' கட்டுதல், தலைவர் கலைஞருக்கு சிலைகள், 18 ஒன்றிய செயலாளர்களுக்கும் புதிய நான்கு சக்கர பொலீரோ வாகனம் வழங்குதல். தொகுதி மக்களுக்கு வேட்டி,சேலை,பேண்ட் பிட், சர்ட் பிட், எவர்சில்வர் தண்ணீர் பாட்டில், குடை, புத்தகங்கள், காலண்டர்கள், அரசு வேலைவாய்ப்புகளை சிந்தாமல் சிதறாமல் வழங்குதல்....
இதனால் கிடைத்த பலன் என்ன தெரியுமா?

இதோ ஒரு படம் போட்டிருக்கின்றேனே... அதைப்போய் பாருங்கள்... அதிமுக, பாமக அன்புமணி, ஐ.ஜே.கே, பி.ஜே.பி என எதிர் முகாமில் இருக்கும் யாருமே தங்கள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ""அய்யய்யோ... குன்னம் தொகுதி எங்களுக்கு வேண்டாமப்பா'' என பதறும் நிலை. 
இது தான் சா.சி.சி சாரின் வெற்றி... ஒரு சட்டமன்ற தொகுதியை எப்படி (தக்க) வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு சா.சி.சி சார் ஒரு உதாரணம்.
அடுத்து
2.மயிலாடுதுறை தொகுதி.
அதிமுக கூட்டணியில் 
1.பாஜக தன் விருப்ப தொகுதியாக மயிலாடுதுறையை கேட்கின்றதாம்.
2.ஆயி அதிமுக தங்களுக்கே மயிலாடுதுறை வேண்டும் என்கிறது
3.பாமக அன்புமணியோ அடைந்தால் மகாதேவி இல்லையெனில் மரணதேவி ரேஞ்சில் மயிலாடுதுறை தங்களுக்கே என ஒற்றைக்காலில் நிற்கின்றார்.
4.அவ்வளவு ஏன்???? வாசன் ஒரு கட்சி வைத்திருக்கின்றாராம். மயிலாடுதுறையை கொடுங்க அறுத்து தள்ளிடுறேன் என அமீத்ஷாவின் திருவடிகளை பிடித்து தொங்குகின்றாராம். 
விட்டு ஜான்பாண்டியன், முழபாண்டியனெல்லாம் கூட மயிலாடுதுறை தான் எங்கள் கனவு தொகுதி என உக்கிரமாய் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர். 
உங்களுக்கு பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா? இந்த சிம்னி விளக்கெல்லாம் வச்சி மேனேஜ் பண்ணிக்கக்கூடாதா? அப்படி எதை சொல்லி ஜெயிப்பீங்க? என கேட்டால் சிம்பிளா ஒன்னே ஒன்னு சொல்றாங்க. "" சிட்டிங் எம்.எல்.ஏவின் சாதனைகளை!?!? சொல்லி ஓட்டு கேட்ப்போம்''
அது தான் போகட்டும் ஆளும் கட்சி கூட்டணி என்னா சொல்லுது மயிலாடுதுறை தொகுதி குறித்து?
திமுக தங்களுக்கே மயிலாடுதுறை தொகுதி வேண்டும் என கிட்டத்தட்ட நாற்பது காலில் நிற்கின்றது. 
காங்கிரஸ் கட்சியோ ""மயிலாடுதுறை எங்கள் கோட்டை'' என்கிறது. தனித்து நின்ன போது எத்தனை ஓட்டு வாங்குனீங்க என கேட்டா எதிரே ஆளே இல்லாம காணாமல் போய்டுறாங்க. தொகுதி முழுக்க ""ஆய்வு'' செய்து வைத்திருப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் அவற்றை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல். 
வி.சி யோ தங்களுக்கு மயிலாடுதுறை பொதுத்தொகுதி வேண்டும் என திமுகவை கேட்டு வருகின்றதாம். 
மக்கள் நீதி மய்யமோ எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கினால் கூட எங்களுக்கே வேண்டும் என்கிறது. காரணம் கேட்டால் இங்கே தான் சிரிச்சமூஞ்சி மக்கள் இருக்காங்க(அதாவது இளிச்ச வாயர்கள்)  அதனால எங்களுக்கே மயிலாடுதுறை தொகுதி என்கிறது. 
கம்யூனிஸ்டுகளுக்கு கூட தொகுதி மீது ஒரு கண் இருக்கின்றதாம். மதிமுக மிகுந்த ஆசைப்படுதாம். அதனால் தான் ஜனவரி 25 மொழிப்போர் வீரவணக்க நாளில் வைகோவே மயிலாடுதுறையில் பேசுகின்றாராம். ""கேண்டிடேட்டுக்கு ஆள் இருக்கா?'' என கேட்டமைக்கு கும்மிடிப்பூண்டியிலே இருந்து ஒரு சுதாவை இறக்குமதி செஞ்சு எம்.பி ஆக்குனீங்கல்ல.... நாங்க கோவில்பட்டியிலேயிருந்து ஒரு உமாவை இம்போர்ட் செய்றோம்'' என அசத்தல் பதில் சொல்றாங்கலாம். 
அதியமான் ஆதித்தமிழர் கட்சி கூட ஆசைப்படுதாம். தவிர தமீமுல் அன்சார், கருணாஸ் எல்லோருக்கும் தீவிர ஆசை எங்கள் தொகுதி மீது!
ஆனா ஒன்னுடா ""சிட்டிங் எம்.எல்.ஏவின் சாதனைகளை சொல்லி நாங்க ஓட்டு கேட்போம்னு எங்க கூட்டணிக்கட்சிக்காரன் சொன்னா பரவாயில்லைடா... எதிர்கட்சிக்காரன் அந்த டயலாக் சொல்றதைத்தான் என்னால செரிக்க முடியலை! 
என்ன நடக்குதுன்னு வேடிக்கை பார்ப்போம்!
- அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் 
@highlight 
Dmk Followers 

கருத்துகள் இல்லை: